×

காரைக்காலில் 54 பேருக்கு கொரோனா

காரைக்கால், ஏப். 2: காரைக்கால் மாவட்டத்தில் நேற்று 586 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் காரைக்காலில் 11 பேர், திருநள்ளாறில் 6 பேர், கோட்டுச்சேரியில் 6 பேர், நிரவியில் 5 பேர், கோவில்பத்தில் 7 பேர், நெடுங்காட்டில் 3 பேர், திருப்பட்டினத்தில் 8 பேர், நல்லாத்தூரில் 3 பேர், அம்பகரத்தூரில் 3 பேர், நல்லம்பலில் 2 பேர் என 54 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது.காரைக்காலில் இதுவரை 4,512 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டு 4,069 பேர் குணமடைந்துள்ளனர். 366 பேர் தனிமைப்படுத்தப்பட்டும், மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்றும் வருகின்றனர்.

Tags : Karaikal ,
× RELATED வெயிலின் தாக்கம் அதிகரிக்க வாய்ப்பு;...