×

கலெக்டர் அலுவலகத்துக்கு முககவசம் அணியாமல் வந்தவர்களுக்கு அபராதம் விதிப்பு

நாகை, ஏப். 2: நாகை கலெக்டர் அலுவலகத்துக்கு முககவசம் அணியாமல் வந்த மக்களிடம் அபராதம் விதிக்கப்பட்டது.தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் முதல் கொரோனா தொற்றின் தாக்கம் மீண்டும் அதிகரித்து வருகிறது. சென்னை, கோயம்புத்தூர், தஞ்சாவூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. இந்நிலையில் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கையும் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. இதனால் சுகாதாரத்துறை சார்பில் பல்வேறு தடுப்பு நடவடிக்கை எடுத்தபோதிலும் பல்வேறு இடங்களில் பொதுமக்கள் சமூக இடைவெளி இல்லாமலும், முககவசம் அணியாமலும் சுற்றி வருகின்றனர்.

சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் கொரோனா தொற்று அதிகரிப்பதால் ஏப்ரல் 30ம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது.மேலும் மாவட்ட நிர்வாகம் மூலம் வர்த்தக நிறுவனங்கள், கடைகள், சாலையில் செல்பவர்கள் முககவசம் அணியாமல் வந்தால் போலீசார் மற்றும் சுகாதார பணியாளர்கள் சார்பில் ரூ.200 வரை அபராதம் விதிக்கப்படுகிறது.இந்நிலையில் நேற்று நாகை கலெக்டர் அலுவலகத்தில் முககவசம அணியாமல் பணிபுரிபவர்கள் மற்றும் அலுவலகத்துக்கு வந்து செல்லும் பொதுமக்களுக்கு நகராட்சி பணியாளர்கள் மூலம் அபதாரம் விதிக்கப்பட்டது. அரசு அலுவலகங்களில் முககவசம் அணியாமல் செல்லும் நபர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

Tags : Collector's Office ,
× RELATED பெரம்பலூர் மாவட்ட எல்லைக்குள் சிறுத்தை: தவறான தகவல்