வி.கைகாட்டி அருகே காலாவதியான சுரங்கத்தில் தவறி விழுந்து பசுமாடு சாவு

அரியலூர், ஏப்.2: அரியலூர் மாவட்டம் வி.கைகாட்டி அடுத்த சின்னநாகலூர் கிராமத்தை சேர்ந்தவர் சின்னதம்பி(45). விவசாயியான இவர் ஆடு, மாடுகளை சின்னநாகலூர் காட்டுப்பகுதியில் மேய்ப்பது வழக்கம்.இந்நிலையில் நேற்று முன்தினம் ஆடு, மாடுகளை காடுகளில் மேய்ச்சலுக்கு விட்டுவிட்டு வீட்டிற்கு வந்துள்ளார். பின்னர் மாலை பசுமாட்டை கணவில்லை என பல்வேறு இடங்களில் தேடியும் மாடு கிடைக்கவில்லை. இந்நிலையில் நேற்று காலை தனியார் சிமென்ட் ஆலைக்கு சொந்தமான காலாவதியான சுண்ணாம்புக்கல் சுரங்கத்தின் தண்ணீரில் பசுமாடு இறந்து கிடந்ததை அப்பகுதியில் சென்றவர்கள் கண்டு மாட்டு உரிமையாளர் சின்னதம்பியிடம் தகவல் தெரிவித்தனர்.பின்னர் சுண்ணாம்புக்கல் சுரங்கத்தில் தண்ணீரில் இறந்து கிடந்த பசுமாட்டை மீட்டு பரிசோதனைக்கு பிறகு வனப்பகுதியில் புதைத்தனர். இது குறித்து கயர்லாபாத் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories: