×

அரியலூர் தொகுதியில் அதிமுக வேட்பாளர் தாமரை ராஜேந்திரனை ஆதரித்து சுரேஷ் மூப்பனார் வாக்கு சேகரிப்பு

அரியலூர், ஏப்.2: அரியலூர் தொகுதியில் அரசு கொறடாவும், அதிமுக வேட்பாளருமான தாமரை ராஜேந்திரன் செய்த பணிகள் மற்றும் அதிமுகவின் தேர்தல் வாக்குறுதிகளை எடுத்துக் கூறி தமாகாவின் சுரேஷ் மூப்பனார் வாக்கு சேகரித்தார்.அரியலூர் நகர பகுதிகளில் தாமரை ராஜேந்திரனுக்கு வாக்கு சேகரிக்க தொடங்கிய தமாகா கட்சியின் சுரேஷ் மூப்பனார் தொடர்ந்து, பாளையப்பாடி, வெங்கனூர், சுண்டக்குடி, கடுகூர் பகுதியில் அரசின் சாதனைகள், தாமரை ராஜேந்திரன் செய்த பணிகள் குறித்து கூறி பிரசாரம் செய்தார்.

குறிப்பாக அரியலூர் நகரில் மருத்துவ கல்லூரி, ரயில்வே உயர்மட்ட பாலம், மருதையாற்றில் தடுப்பணை மற்றும் பாலம், ஏரிகள் தூர்வாரியது, சாலை பணிகள் உட்பட பல்வேறு பணிகள் செய்துள்ளார். இன்னும் பல பணிகளை இத்தொகுதிக்கு செய்ய உள்ளார். எனவே தாமரை ராஜேந்திரனுக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து அவரை வெற்றி பெற செய்ய கேட்டுக்கொண்டார். இந்த வாக்கு சேகரிப்பின்போது அதிமுக, தமாகா, பாமக, பாஜகவினர் திரளாக கலந்துகொண்டனர்.

Tags : Suresh Moopanar ,AIADMK ,Tamara Rajendran ,Ariyalur ,
× RELATED அதிமுக ஆட்சியிலும் கல்வராயன் மலையில்...