×

பெரம்பலூர், குன்னம் சட்டமன்ற தொகுதிக்கு வாக்குப்பதிவு சரி பார்க்கும் இயந்திரங்கள் கணினி மூலம் ஒதுக்கீடு

பெரம்பலூர்,ஏப்.2: பெரம்பலூரில் வாக்குபதிவை சரிபார்க்கும் இயந்திரங்களை கணினியில் தரவு முறையில் ஒதுக்கீடு செய்யும் பணி கலெக்டர், குன்னம் தொகுதி தேர்தல் பார்வையாளர் முன்னிலையில் நடைபெற்றது.பெரம்பலூர் மாவட்டத்தில் சட்டமன்ற பொதுத்தேர்தலை முன்னிட்டு, கூடுதலாக உள்ள வாக்குப்பதிவினை சரிபார்க்கும் இயந்திரங்களை கணினியில் தரவு முறையில் ஒதுக்கீடு செய்யும் பணி மாவட்ட தேர்தல் அலுவலரான கலெக்டர் வெங்கடபிரியா தலைமையில், குன்னம் சட்டமன்ற தொகுதி பொதுப்பார்வையாளர் தேஜஸ்வி நாயக் முன்னிலையில் நேற்று பெரம்பலூர் சப்.கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. வாக்குப்பதிவு இயந்திரங்களில் வேட்பாளர்களின் சின்னங்களை பதிக்கும் பணியின்போது பெரம்பலூர் சட்டமன்ற தொகுதியில் 17 வாக்குப்பதிவு சரிபார்க்கும் இயந்திரங்களும், குன்னம் சட்டமன்ற தொகுதியில் 32 வாக்குப்பதிவு சரிபார்க்கும் இயந்திரங்களும் பழுதடைந்துள்ளவை என கண்டறியப்பட்டது. இதற்கு மாற்றாக கூடுதலாக இருந்த வாக்குப்பதிவு சரிபார்க்கும் இயந்திரங்களை 28.5 சதவீத இருப்பாக கொண்டு, கணினியில் தரவு முறையில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் சரிபார்க்கும் இயந்திரங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டன.

அதனடிப்படையில் பெரம்பலூர் சட்டமன்றத் தொகுதிக்கு 19 இயந்திரங்களும், குன்னம் சட்டமன்ற தொகுதிக்கு 33 இயந்திரங்களும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதன்படி பெரம்பலூர் சட்டமன்ற தொகுதியில் 28.5சதவீத இருப்புடன் 548 வாக்குப்பதிவினை சரிபார்க்கும் இயந்திரங்களும், குன்னம் சட்டமன்ற தொகுதியில் 497வாக்கு பதிவினை சரிபார்க்கும் இயந்திரங்களும் பயன்படுத்தப்பட உள்ளன.நிகழ்ச்சியில் பெரம்பலூர் சட்டமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரான சப். கலெக்டர் பத்மஜா மற்றும் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள் உடனிருந்தனர்.

Tags : Perambalur ,Kunnam ,Assembly ,
× RELATED பெரம்பலூர் மக்களவைத் தொகுதியில் IJK...