×

பெரம்பலூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் தீவிர விபத்து சிகிச்சை மையம் அமைக்கப்படும்

பெரம்பலூர்,ஏப்.2: பெரம்பலூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் தீவிர விபத்து சிகிச்சை மையம் அமைக்கப்படும் என திமுக வேட்பாளர் பிரபாகரன் வாக்குறுதி அளித்தார்.
பெரம்பலூர் தனி சட்டமன்ற தொகுதியில் திமுக வேட்பாளராக பிரபாகரன் போட்டிருக்கிறார். இதனையொட்டி திமுக நிர்வாகிகள் மற்றும் கூட்டணி கட்சியினருடன் தொடர்ந்து சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு உதயசூரியன் சின்னத்திற்கு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். நேற்று பெரம்பலூர் நகராட்சிக்கு உட்பட்ட துறைமங்கலம் பகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுப்பட்டார். அப்போது அவர் பேசியதாவது:பெரம்பலூர் அருகே திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் அடிக்கடி நடக்கும் சாலை விபத்துகளால் ஏற்படும் உயிரிழப்புகளை தடுக்க, தீவிர விபத்து சிகிச்சை மையம் கொண்டு வரப்படும்.

அரசு தலைமை மருத்துவமனையில் காலிப்பணியிடங்கள் அனைத்தும் நிரப்பப்படும். பெரம்பலூர் தொகுதியில் அரசு வேளாண்மை கல்லூரி கொண்டு வரப்படும். லாடபுரம், வேப்பந்தட்டை பகுதிகளில் புதிய காவல்நிலையங்கள், கிருஷ்ணாபுரத்தில் தீயணைப்பு நிலையம் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.நிகழ்ச்சியின் போது மாவட்ட செயலாளர் குன்னம் ராஜேந்திரன், தலைமை செயற்குழு உறுப்பினர் ராஜேந்திரன், மாநில நிர்வாகிகள் துரைசாமி, டாக்டர் வல்லபன், முன்னாள் எம்எல்ஏ ராஜ்குமார், அவைத்தலைவர் நடராஜன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags : National Highway ,Perambalur ,
× RELATED சென்னை- பெங்களூரு தேசிய...