விராலிமலை, இலுப்பூரில் போலீசுக்கு டிமிக்கி கொடுத்த வழிப்பறி ஆசாமி கைது

விராலிமலை, ஏப் .2: விராலிமலை மற்றும் இலுப்பூர் பகுதியில் செயின் பறிப்பு வழக்கில் தேடப்பட்டு வந்த மற்றொரு பைக் திருடன் போலீசில் சிக்கினான். அவனிடமிருந்து 12 பவுன் செயின் மற்றும் ஒரு பைக்கை போலீசார் கைப்பற்றினர்.இலுப்பூரில் கடந்த 24ம் தேதி மூதாட்டி மற்றும் விராலிமலையில் கடந்த 26ம்தேதி பெண்ணின் கழுத்தில் கிடந்த செயினை பைக்கில் வந்த மர்ம நபர்கள் அறுத்துக் கொண்டு தப்பினர். இது தொடர்பாக புகாரின் பேரில் விராலிமலை மற்றும் இலுப்பூர் போலிசார் வழக்கு பதிவு விசாரணை மேற்கொண்டு வந்தனர்.கடந்த 29ம் தேதி மாத்தூர் போலீசார் சோதனையின் போது பல சையின் திருட்டு வழக்கில் தொடர்புடைய திருச்சி மாவட்டம் நாகமங்கலம் பகுதி மேக்குடியை சேர்ந்த வேலுச்சாமி (45) சிக்கினான்.

அவரிடம் நடத்திய விசாரணையில் இலுப்பூரில மூதாட்டியின் செயினை பைக்கில் வந்து அறுத்து திருடியது தெரியவந்தது. இதையடுத்து அவனிடமிருந்து 5 பவுன் சையினை கைப்பற்றிய இலுப்பூர் போலிசார். மேலும் வேலுச்சாமியிடம் மேற்கொண்ட விசாரனையில் கரூர் ஆண்டாள் தெருவை சேர்ந்த தமிழரசன் மகன் நந்தகுமாருடன் (44) சேர்ந்து விராலிமலையிலும் பெண்ணின் செயினை அறுத்தது தெரியவந்தது. இதையடுத்து கரூர் சென்று நந்தகுமாரை கைது செய்த விராலிமலை போலிசார், இவரிடம் இருந்து 12 பவுன் நகை மற்றும் ஒரு இருசக்கர வாகனத்தை கைப்பற்றினர்.

Related Stories:

>