திமுக வேட்பாளர் மெய்யநாதன் உறுதி புதுக்கோட்டை தொகுதி மக்களுக்கு நன்றி உள்ளவனாக என்றும் இருப்பேன்

புதுக்கோட்டை, ஏப். 2: புதுக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் திமுக வேட்பாளராக டாக்டர் முத்துராஜா போட்டியிடுகிறார். இவர் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில் நேற்று திருமலைராயசமுத்திரத்தில் துவங்கி வாராப்பூர் ஊராட்சியிலும், பிற்பகல் 3 மணி முதல் ஆதனக்கோட்டை பகுதியில் உள்ள 8 ஊராட்சிகளிலும் வாக்கு சேகரித்தார். அப்போது அவருக்கு பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். பின்னர் திமுக வேட்பாளர் முத்துராஜா பேசுகையில், புதுக்கோட்டை மக்களுக்கு நன்றி உள்ளவராக இருப்பேன். மக்கள் பணியை தொடர்ந்து செய்வேன். திமுகவின் தேர்தல் அறிக்கையில் இடம் பெற்றுள்ள அறிவிப்புகள் மக்களிடம் கிடைக்கும் வகையில் பணியாற்றுவேன். தொகுதி மக்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளையும் செய்து தருவேன். எனவே உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து என்னை பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வைக்க வேண்டும் என்றார்.வேட்பாளர் பிரசாரத்தின்போது திமுக மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் பங்கேற்றனர்.

Related Stories:

>