×

விற்பனை அதிகரிப்பால் வியாபாரிகள் மகிழ்ச்சி திமுக தேர்தல் அலுவலகத்தில் பேனரை சேதப்படுத்திய மர்மநபர்கள் போலீசில் புகார்

திருமயம், ஏப். 2: திருமயம் அருகே திமுக தேர்தல் அலுவலத்தில் இருந்த பேனரை மர்மநபர்கள் சேதப்படுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.திருமயம் தொகுதி திமுக வேட்பாளராக எம்எல்ஏ ரகுபதி போட்டியிடுகிறார். இவர் கடந்த சில வாரங்களாக தொகுதியின் அனைத்து கிராமங்களிலும் தீவிர பிரசாரம் செய்து வருகிறார். இந்நிலையில் திருமயம் அருகே உள்ள கோனாபட்டு கிராமத்தில் திமுக கூட்டணி கட்சி தேர்தல் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் தேர்தல் அலுவலகத்தின் கூட்டணி கட்சி கொடிகள் மற்றும் பேனர்கள் வைக்கப்பட்டுள்ளது.நேற்று முன்தினம் இரவு திமுக அலுவலகம் முன் வைக்கப்பட்டுள்ள பேனரை மர்மநபர்கள் சேதப்படுத்தியதாக கூறப்படுகிறது. யார் சேதப்படுத்தியது என தெரியாததால் திருமயம் போலீசில் சம்பந்தப்பட்ட கட்சியினர் புகார் தெரிவித்துள்ளனர்.

Tags : DMK election office ,
× RELATED திமுக தேர்தல் அலுவலகம் திறப்பு