எம்பி நவாஸ்கனி தலைமையில் சாலை மறியல் சுட்டெரிக்கும் கோடை வெயில் மண்பானைகளை நாடி செல்லும் மக்கள்

புதுக்கோட்டை, ஏப். 2: புதுக்கோட்டை மாவட்டத்தில் கோடை வெயிலின் தாக்கத்தை தாங்க முடியாமல் மண்பானைகளை மக்கள் நாடி செல்கின்றனர். இதனால் விற்பனை அதிகரித்துள்ளதால் வியாபாரிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.புதுக்கோட்டை மாவட்டத்தில் கோடை வெயிலின் தாக்கம் அதிகளவில் உள்ளது. இதனால் பொதுமக்கள் தண்ணீரை பிரிட்ஜ் (குளிர்சாதன பெட்டியில்) வைத்து குடித்து வருகின்றனர். இதனால் உடல்ரீதியாக பிரச்னை வருகிறது. இதையறிந்து தற்போது பலர் வீடுகள் மற்றும் அரசு அலுவலங்களில் மண்பாணையில் தண்ணீரை ஊற்றி வைத்து குடித்து வருகின்றனர். மண்பாணையில் வைக்கப்பட்டுள்ள தண்ணீரை குடித்தால் பக்கவிளைவுகள் இல்லாமல் வெயிலுக்கு இதமாக இருக்கும். புதுக்கோட்டை மாவட்டத்தில் பெரும்பாலான மக்கள் மண்பானை பொருட்களை பயன்படுத்த துவங்கியுள்ளதால் விற்பனையும் அதிகரித்துள்ளது.

நமது முன்னோர்கள் நீண்ட ஆயுள், ஆரோக்கியத்தை தரக்கூடிய மண்பானை சமையலை விரும்பி வந்தனர். உணவில் சுவையை கூட்டுவதுடன் நீண்ட நேரத்துக்கு கெடாமல் வைத்திருக்க முடியும் என்பதால் மண்பானைகளை அதிகளவில் மக்கள் பயன்படுத்தி வந்தனர். மண்பாத்திரத்தில் தயிரை ஊற்றி வைத்தால் புளிக்காமல் இருப்பதோடு குளிர்ச்சியாகவும், சுவையாகவும் இருக்கும். மண்பானைகளில் ஊற்றி வைக்கும் தண்ணீரை குடிக்கும்போது உடலுக்கு குளிர்ச்சி தருவதோடு எந்தவித பக்கவிளைவும் வராது. இதனால் கோடைகாலத்தை சமாளிக்க புதுக்கோட்டை மாவட்டத்தில் மண்பானை விற்கும் இடங்களை பொதுமக்கள் தேடி அலைய துவங்கி விட்டனர்.புதுக்கோட்டை மாவட்டத்தில் கீரனூர், இலுப்பூர், அன்னவாசல் பகுதிகளில் பலவித வடிவங்களில் மண்பானைகளை கொண்டு வந்து விற்பனை செய்கின்றனர். திருகு குழாய் பொருத்தப்பட்ட மண்பானை, பாட்டில் மற்றும் ஜக்கு மண்பானையிலான பொருட்கள் விற்பனைக்கு வந்துள்ளன. இதில் மிகவும் சவுகரியாக உள்ள திருகு குழாய் பொருத்தப்பட்ட மண்பானைகளுக்கு நல்ல கிராக்கி ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து மண்பானை வியாபாரிகள் கூறியதாவது: புதுக்கோட்டை மாவட்டத்தில் மண்பானை செய்ய தேவையான மூலப்பொருட்களில் முதன்மையானது மண். இது கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால் நாங்கள் மண்ணை தேடி அழைய வேண்டியுள்ளது. இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளாக பொதுமக்கள் மண்பானைகளில் தண்ணீர், மோர், தயிர் ஊற்றி வைத்து பருகுவதற்கு ஆர்வம் காட்டி வருகின்றனர். நாங்கள் கடந்த பல ஆண்டுகளாக மண்பாண்ட பொருட்கள் வியாபாரம் செய்து வருகிறோம். காலத்திற்கேற்ப பல வடிவங்களில் தண்ணீர் ஊற்றி வைக்கும் மண்பாண்டங்கள் அதிகளவில் தயாரிக்கப்படுகிறது. வீட்டில் மண்பானை சமையல் செய்ய விரும்புவர்களுக்கு தனியாக சிறப்பான முறையில் செய்து கொடுக்கிறோம். மண்பானை உணவுகளை சாப்பிட்டால் உடல் உறுதியாகவும், ஆரோக்கியமாகவும் இருக்கும் என்றார்.

Related Stories:

>