பட்டுக்கோட்டையில் போக்குவரத்து நெரிசலை சரி செய்ய புறநகரில் புதிய பேருந்து நிலையம் அமைக்கப்படும்

பட்டுக்கோட்டை, ஏப்.2: பட்டுக்கோட்டை சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் கா.அண்ணாதுரை நேற்று 2வது நாளாக பட்டுக்கோட்டை நகராட்சி பகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். பட்டுக்கோட்டை நகரம் முழுவதும் வேட்பாளருக்கு பெண்கள் ஆரத்தி எடுத்தும், தொண்டர்கள் ஆளுயர மாலை அணிவித்தும், சால்வை அணிவித்தும் உற்சாக வரவேற்பளித்தனர். பட்டுக்கோட்டை நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் வேட்பாளர் அண்ணாதுரை தனக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்கு கேட்டு பொதுமக்களிடம் பேசுகையில், கடந்தஎன் வாழ்நாள் முழுவதும் உங்களில் ஒருவனாக இருந்து உங்களுக்காக பணியாற்றுவேன். முன்னாள் முதல்வர் மறைந்த கருணாநிதி ஆட்சி காலத்தில்தான் பட்டுக்கோட்டையில் அரை விட்ட சாலை கொண்டு வரப்பட்டது. பட்டுக்கோட்டை நகரத்தின் மிக முக்கியமான பிரச்னையாக உள்ளது போக்குவரத்து நெரிசல்.

 அதை சரிசெய்யும் விதமாக புறநகர் பகுதியில் மேலும் ஒரு பெரிய பேருந்து நிலையம் அமைக்க நிச்சயமாக நடவடிக்கை எடுப்பேன். தற்போதுள்ள அரை விட்ட சாலையை முழு விட்ட சாலை ஆக்குவேன் என்றார். வேட்பாளருடன் தஞ்சை தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் ஏனாதி பாலசுப்ரமணியன், நகர திமுக பொறுப்பாளர் செந்தில்குமார் மற்றும் திமுக கூட்டணி கட்சிகளான காங்கிரஸ், சிபிஐ. சிபிஎம், விடுதலைச் சிறுத்தைகள், மதிமுக உள்ளிட்ட கட்சிகளைச் சேர்ந்த நிர்வாகிகள், தொண்டர்கள் உள்பட ஏராளமானோர் உடன் சென்றனர்.

Related Stories: