பாபநாசம் சட்டமன்ற தொகுதியில் மனித நேய மக்கள் கட்சி வேட்பாளர் ஜவாஹிருல்லாவுக்கு திமுகவினர் பிரசாரம்

பாபநாசம், ஏப், 2: திமுக கூட்டணியில் பாபநாசம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் வேட்பாளரும், மனித நேய மக்கள் கட்சித் தலைவருமான ஜவாஹிருல்லாவை ஆதரித்து திமுக சார்பில் கபிஸ்தலம் அருகே திருவையாறு அடுத்த ஈச்சங்குடி, சோமேஸ்வரபுரம், வீரமாங்குடி, கணபதி அக்ரஹாரம், இலுப்பக்கோரை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் திமுக பாபநாசம் வடக்கு ஒன்றிய பொறுப்பாளர் தாமரைச்செல்வன், பாபநாசம் சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர் கலைச்செல்வன், பெருமாள் கோயில் ஊராட்சி மன்றத் தலைவர் ராஜேந்திரன் உள்பட ஏராளமான திமுக உள்ளிட்ட கூட்டணி கட்சியினர் கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் வீதி வீதியாக சென்று பிரசாரம் மேற்கொண்டனர்.

நந்தி வாய்க்கால், இலுப்பக்கோரை வாய்க்கால், தூரியார் வாய்க்கால், அய்யனார் கோயில் வாய்க்கால், சோமேஸ்வரபுரம் வாய்க்கால், பழைய மண்ணியார் உள்ளிட்ட தூர் வாராத வாய்க்கால்கள் பெயரளவில் இல்லாமல் முழமையாகத் தூர் வாரப்படும். வெல்லத்தை சந்தைப்படுத்த திருப்பூர் மாவட்டம், திண்டுக்கல் மாவட்த்திற்கு செல்லும் கரும்பு விவசாயிகளின் நலன் கருதி இப்பகுதியில் வெல்ல சந்தை ஏற்படுத்தப்படும்.அடிப்படை வசதி இல்லாத கிராமங்களே பாபநாசம் சட்டமன்றத் தொகுதியில் இல்லை என்ற நிலை உருவாக்கப்படும் என்றனர்.

Related Stories:

>