தேர்தல் அலுவலர் தகவல் பாஜகவை தோற்கடித்தால் வேளாண் விரோத சட்டங்கள் திரும்ப பெறமுடியும் டெல்லியில் போராடும் விவசாய பிரதிநிதி பேச்சு

தஞ்சை, ஏப்.2: மக்கள் அதிகாரம் சார்பில் தஞ்சை ஆப்ரகாம் பண்டிதர் சாலையில் மக்கள் அதிகாரம் ஒருங்கிணைப்பாளர் தேவா தலைமையில் தேர்தல் பொதுக்கூட்டம் நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட அகில இந்திய விவசாய போராட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் டெல்லியில் போராடும் ஆசாத் சங்கர் கிசான் மஞ்ச் சங்க விவசாய பிரதிநிதி ராஜ்விந்தர் சிங் பேசியதாவது:90 சதவிதம் படிப்பறிவு எட்டிய மாநிலமாக தமிழ்நாடு உள்ளது. ஆதலால் மோடி சொல்கின்ற பொய்கள் மக்களிடம் எடு பட வில்லை.  தமிழ்நாட்டு ஆட்சியாளர்கள் மோடி அரசு கொண்டுவந்த வேளாண்திருத்த சட்டம் உள்ளிட்ட மக்கள் விரோத சட்டங்களை ஆதரித்து அமல் படுத்தி வருகின்றனர். மேலும் தமிழ் நாட்டின் கல்வி உரிமை, நீட் உள்ளிட்ட உயர் தேர்வுகள், இளைஞர்களின் வேலை வாய்ப்புகள் உள்ளிட்ட மாநில உரிமைகளை விட்டுக்கொடுத்து தலைகுனிவை ஏற்படுத்தி விட்டார்கள். தமிழன் என்று சொல்லடா தலைநிமிர்ந்து நில்லடா என்ற வரிகளை உண்மையாக்க தமிழ்நாட்டில் அதிமுக பாரதியஜனதா கூட்டணியை டெபாசிட் இழக்க செய்ய வேண்டும். நடைபெறுகின்ற சட்டமன்ற தேர்தலில் பிஜேபியை தோற்கடிப்பதன் மூலம் வேளாண் விரோத சட்டங்கள் உள்ளிட்ட மக்கள் விரோத சட்டங்களை திரும்பப்பெற வைக்க முடியும். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories:

>