அமைச்சர் காமராஜ் முயற்சியால் நன்னிலம் தொகுதி வளர்ச்சி பெற்றது

திருவாரூர், ஏப்.2: நன்னிலம் தொகுதியில் போட்டியிடும் அமைச்சர் காமராஜை ஆதரித்து தமாகா தலைவர் ஜி.கே.வாசன் நேற்று பிரசாரம் மேற்கொண்டார். அப்போது வலங்கைமானில் ஜி.கே.வாசன் பேசியது: நன்னிலம் தொகுதி அதிமுக கூட்டணி வேட்பாளர் அமைச்சர் காமராஜ் இத்தொகுதியில் பல்வேறு வளர்ச்சிப் பணிகளை மேற்கொண்டுள்ளார். இத்தொகுதியில் மட்டும் இதுவரை எண்ணற்ற பாலங்கள் அமைக்கப்பட்டுள்ளது. மாணவ, மாணவிகளின் கல்வி வளர்ச்சிக்காக 2 அரசு கல்லூரிகள், ஒரு அரசு பாலிடெக்னிக் கல்லூரி அமைக்கப்பட்டுள்ளது.

அனைத்து பிரதான சாலைகளும் மிக நேர்த்தியாக அமைக்கப்பட்டுள்ளது. இப்படி நன்னிலம் தொகுதி வளர்ச்சி பெற்று இருப்பதற்கு அமைச்சர் காமராஜின் முயற்சிதான் காரணம். வாஷிங்மெஷின், குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1,500, 6 பவுன் நகை கடன் தள்ளுபடி உள்ளிட்ட திட்டங்களுக்கு பின்னணியில் அமைச்சர் காமராஜின் ஆலோசனையும் உண்டு என்பதை நான் அறிந்தவன்.மேலும் நன்னிலம் தொகுதி மக்களை கொரோனாவின் தாக்கத்திலிருந்து பாதுகாத்தார். அதனுடைய பிரதிபலனாக அவர் மருத்துவ சிகிச்சையில் இருக்கும்போது நீங்கள் பிரார்த்தனை செய்து காப்பாற்றினீர்கள். அதற்கு ஏற்றார்போல் அனைவரும் அமைச்சர் காமராஜை வெற்றி பெற செய்ய வேண்டும். இவ்வாறு ஜி.கே.வாசன் பேசினார்.

 கட்சியினர் திமுகவில் ஐக்கியம்

Related Stories:

>