திமுக வேட்பாளர் பூண்டிகலைவாணன் உறுதி நீடாமங்கலத்தில் புதிய பஸ் நிலையம், ரயில்வே பாலம் மன்னார்குடி திமுக வேட்பாளர் டிஆர்பி ராஜா உறுதி

மன்னார்குடி, ஏப். 2: மன்னார்குடி தொகுதி திமுக வேட்பாளர் டிஆர்பி ராஜா பரவாக்கோட்டை ஊராட்சியில் இருந்து பிரசாரத்தை துவக்கினார். தொடர்ந்து, நீடாமங்கலம் ஒன்றியத்திலுள்ள பூவனூர், பெரம்பூர், ரிஷியூர், அனுமந்தபுரம், ஒளிமதி உள்ளிட்ட ஊராட்சிகளிலும், பேரூராட்சி வார்டுகளிலும் வேட்பாளர் டிஆர்பி ராஜா பிரசாரம் மேற்கொண்டு மு.க.ஸ்டாலின் தலைமையில் நல்லாட்சி அமைய உதயசூரியன் சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டுமாறு கேட்டுக்கொண்டார்.அப்போது, டிஆர்பி ராஜா பேசுகையில், பரவாக்கோட்டையில் கால்நடை மருத்துவமனை, அங்கன்வாடி கட்டிடங்கள், சாலை பணி உள்பட ரூ.72 லட்சத்திற்கு மேல் எம்எல்ஏ நிதியிலிருந்து பணி நடந்துள்ளது. செங்குளம் சாலையை சீரமைக்க ரூ.13.77 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

20.6.2017 அன்று சட்டமன்றத்தில் கேள்வி எழுப்பி பரவாக்கோட்டையில் ஆரம்ப சுகாதார நிலையம் கொண்டு வரப்பட்டது. திமுக ஆட்சி அமைந்ததும் இந்த ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு நவீன கட்டிடம் கட்டி, உபகரணங்கள் வழங்கப்படும். நீடாமங்கலத்தில் புதிய பஸ் நிலையம், போக்குவரத்துக்கு நெரிசலை குறைக்க உயர்மட்ட ரயில்வே பாலம், புறவழிச்சாலை அமைத்து தரப்படும் என்றார். பிரசாரத்தில், மன்னை மேற்கு ஒன்றிய செயலாளர் மேலவாசல் தன்ராஜ், முன்னாள் மாவட்ட துணை செயலாளர் முத்துவேல், மாவட்ட பிரதிநிதி கிரி, பாலகுமார் உள்ளிட்ட திமுக, கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

Related Stories:

>