×

வாக்குப்பதிவு இயந்திரங்களை எடுத்து செல்லும் வாகனங்களுக்கு ஜிபிஎஸ் கருவி பொருத்தும் பணி

திருவாரூர், ஏப்.2: திருவாரூர் மாவட்டத்திலுள்ள 4 எம்எல்ஏ தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு இயந்திரங்களை எடுத்து செல்லும் வாகனங்களுக்கு ஜி.பி.எஸ் கருவி பொருத்தும் பணி நேற்று நடைபெற்றது.திருவாரூர் மாவட்டத்தில் திருவாரூர், திருத்துறைப்பூண்டி, மன்னார்குடி மற்றும் நன்னிலம் என 4 எம்எல்ஏ தொகுதிகள் இருந்து வருகின்றன. வரும் 6ம் தேதி தேர்தல் நடைபெறுவதையொட்டி தொகுதியின் தலைமையிடத்தில் இருந்து வரும் தாலுகா அலுவலங்களில் வைக்கப்பட்டுள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை வாக்குச்சாவடி மையங்களுக்கு எடுத்து செல்லும் வாகனங்களுக்கு ஜிபிஎஸ் கருவி பொருத்தும் பணியானது நேற்று நடைபெற்றது. இந்த பணியினை மாவட்ட தேர்தல் அலுவலர் சாந்தா பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் அவர் கூறியதாவது, சட்டமன்ற தேர்தல் திருவாரூர் மாவட்டத்தில் சிறப்பாகவும், அமைதியாகவும், 100 சதவீதம் வாக்களிக்கும் விதமாகவும் பல்வேறு முன்னேற்பாடு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அந்தவகையில், திருவாரூர் மாவட்டத்திலுள்ள திருத்துறைப்பூண்டி தொகுதிக்குட்பட்ட 336 வாக்குச்சாவடிகளுக்கும், மன்னார்குடி தொகுதிக்குட்பட்ட 357 வாக்குச்சாவடிகளுக்கும், திருவாரூர் தொகுதிக்குட்பட்ட 388 வாக்குச்சாவடிகளுக்கும், நன்னிலம் தொகுதிக்குட்பட்ட 373 வாக்குச்சாவடிகள் என 1,454 வாக்குச்சாவடிகளுக்கும் வாக்குப்பதிவிற்காக பயன்படுத்தப்படவுள்ள வாக்குப்பதிவு இயந்திரங்களை எடுத்தும் செல்லும் வாகனங்களை கண்காணித்திட, அந்த வாகனங்கள் இயக்கப்படும் வழித்தடங்களை கண்காணித்திடும் வகையில் தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்படவுள்ள வாகனங்களுக்கு ஜி.பி.எஸ் கருவி பொருத்தப்பட்டு வருகிறது. இவ்வாறு சாந்தா தெரிவித்துள்ளார்.முன்னதாக எஸ்.பி அலுவலகத்தில் நடந்த வாக்குச்சாவடிகளுக்கு வாக்குப்திவு இயந்திரங்கள் உள்ளிட்ட உபகரணங்களை பாதுகாப்பாக எடுத்தும் செல்லவும், பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படவுள்ள போலீசாருக்கான ஆலோசனை வகுப்பில் கலந்துகொண்டு உரிய அறிவுரைகளை வழங்கினார். இதில் எஸ்.பி., கயல்விழி, கூடுதல் எஸ்.பிக்கள் கார்த்திக், கணேசன் மற்றும் போலீசார் கலந்துகொண்டனர்.

Tags :
× RELATED வறட்சியின் பிடியில் நீர் நிலைகள்...