×

அமைச்சர் காமராஜ் உறுதி திருவாரூர் நகரில் பல்வேறு இடங்களில் பாதாள சாக்கடையில் அடைப்பு சாலையில் வழிந்தோடும் கழிவுநீர்

திருவாரூர், ஏப்.2: பாதாள சாக்கடை திட்டமானது 30 வார்டுகளை கொண்ட திருவாரூர் நகரில் ரூ.50 கோடியில் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்னர் நிறைவேற்றப்பட்டு தற்போது வீடுகளுக்கு இணைப்புகள் கொடுக்கும் பணி நடந்து வருகிறது.இந்நிலையில் இந்த திட்டமானது உரிய தரத்துடன் மேற்கொள்ளப்படாததால் கழிவுநீர் தொட்டிகளில் நகர் முழுவதும் பல்வேறு இடங்களில் அடைப்புகள் ஏற்படுவதும் அதனை நகராட்சி ஊழியர்கள் சரி செய்வதும் வாடிக்கையாக இருந்து வருகிறது. இந்நிலையில் உரிய தரமில்லாமல் மேற்கொள்ளப்பட்ட இந்த பணியினை தற்போது பராமரிப்பதற்கு நகராட்சி சார்பில் தனியார் நிறுவனம் ஒன்றுக்கு டென்டர் விடப்பட்டுள்ளது. அதன்படி மாதம் ஒன்றுக்கு ரூ.4 லட்சத்து 50 ஆயிரம் பராமரிப்பு செலவிற்காக நகராட்சி மூலம் வழங்கப்படும் நிலையில் இதில் ஒரு குறிப்பிட்ட அளவு தொகையினை கூட செலவு செய்யாமல் அந்த நிறுவனத்தினர் பெருமளவு தொகையினை சுருட்டும் நிலை உள்ளது.

பல்வேறு இடங்களில் கழிவுநீரேற்றும் நிலையங்கள் கட்டப்பட்டு மின்மோட்டார்கள் அமைத்து கொடுக்கப்பட்ட போதிலும் இந்த தனியார் நிறுவனமானது அதனை கூட சரிவர பராமரிக்காமல் பழுது ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக பல்வேறு நேரங்களில் பல நாட்கள் வரையில் கழிவுநீரானது சாலையில் வழிந்தோடும் நிலையே உள்ளது.அதன்படி திருவாரூர் ராமகே ரோடு பகுதியில் ரயில்வே கேட் அருகே கடந்த பல நாட்களாக இந்த பாதாள சாக்கடை மேனுவல் தொட்டியிலிருந்து கழிவுநீரானது பெருக்கெடுத்து வழிந்தோடுவதன் காரணமாக துர்நாற்றம் வீசி தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதுமட்டுமின்றி நகரில் பல்வேறு இடங்களில் இதே போன்று பாதாள சாக்கடை கழிவுநீரானது வழிந்தோடுவதால் தொற்று நோய் பீதியில் மக்கள் உள்ளனர்.

Tags : Minister ,Kamaraj Uruthi Sewage ,Thiruvarur ,
× RELATED போட்டி தேர்வுக்கு தயாராகும் மாணவ,...