×

ஊத்தங்கரையில் ₹94 ஆயிரம் சிக்கியது

ஊத்தங்கரை, ஏப்.2: ஊத்தங்கரையில், தேர்தல பறக்கும்படை நடத்திய வாகன சோதனையில் உரிய ஆவணமின்றி கொண்டு சென்ற ₹94 ஆயிரம் சிக்கிது.ஊத்தங்கரை(தனி) தொகுதியில் தேர்தல் பறக்கும் படை அலுவலர் சக்தி தலைமையிலான குழுவினர், ஊத்தங்கரை -திருப்பத்தூர் சாலையில் காரப்பட்டு அருகே வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அந்த வழியாக வந்த காரை மடக்கி சோதனையிட்டனர். அதில், உரிய ஆவணங்களின்றி ₹94 ஆயிரம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதுதொடர்பாக காரில் இருந்த திருப்பத்தூரைச் சேர்ந்த குமரேசன் என்பரிடம் விசாரித்தபோது, உரிய ஆவணமின்றி எடுத்துச் சென்றது கண்டுபிடிக்கப்பட்டது. உடனே, ₹94 ஆயிரத்தை கைப்பற்றிய பறக்கும் படையினர், தொகுதி தேர்தல் அலுவலர் சேதுராமலிங்கத்திடம்  ஒப்படைத்தனர்.

Tags : Uttaranchal ,
× RELATED சிவராத்திரி தரிசன தலங்கள்