×

ஓசூரில் போலீசார் கொடி அணிவகுப்பு

ஓசூர், ஏப்.2:  பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்க அழைப்பு விடுத்து ஓசூரில் போலீசாரின் கொடி அணிவகுப்பு நடைபெற்றது. தமிழக சட்டப்பேரவை தேர்தல் வரும் ஏப்ரல் மாதம் 6ம் தேதி ஒரே கட்டமாக நடக்கிறது. நாடு முழுவதும் மொத்தம் உள்ள 234 தொகுதிகளில் 4100 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இதனால், தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. அதே நேரத்தில் 100 சதவீத வாக்குப்பதிவுக்கு தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்துள்ளது. பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்க தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இதற்காக வெளி மாநிலங்களில் இருந்து இந்திய துணை ராணுவ படையினர் தமிழகத்திற்கு வரவழைக்கப்பட்டுள்ளனர். இவர்கள், பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்க அழைப்பு விடுத்து கொடி அணிவகுப்பு நடத்தி வருகின்றனர்.

மேலும், உள்ளூர் போலீசாரும் பல்வேறு இடங்களில் அணிவகுப்பு செல்கின்றனர். அதன்படி, ஓசூர் பகுதியில் நேற்று கொடி அணிவகுப்பு நடைபெற்றது. டிஎஸ்பி முரளி தலைமை வகித்து கொடி அணிவகுப்பினை துவக்கி வைத்தார். தாலுகா அலுவலக வளாகத்தில் இருந்து துவங்கிய இந்த ஊர்வலம் தாலுகா அலுவலக சாலை, எம்ஜி சாலை, நேதாஜி சாலை, காமராஜர் காலனி, ஏரி தெரு உள்ளிட்ட முக்கிய வீதிகள் வழியாக நடைபெற்றது இதில், நகர போலீசார் 100க்கும் மேற்பட்டோர், துணை ராணுவத்தினர் 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்

Tags : Hosur ,
× RELATED யானைகள் ஊருக்குள் வருவதை தடுக்க...