அனைத்து தொழிலாளர்களுக்கும் சம்பளத்துடன் கூடிய விடுமுறை

தர்மபுரி, ஏப்.2: தர்மபுரி மாவட்ட கலெக்டர் கார்த்திகா வெளியிட்டுள்ள அறிக்கை:

தமிழக சட்டமன்ற பொதுத் தேர்தலில் அனைத்து வாக்காளர்களும் வாக்களிக்கும் வகையில், அனைத்து வர்த்தகம் மற்றும் வியாபார, தொழில், கல்வி நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலைகளில் பணிபுரியும் பணியாளர்களுக்கு, மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் 1951 பிரிவு 135 பி யின்படி வாக்கு பதிவு நாளான 6ம் தேதி சம்பளத்துடன் கூடிய விடுப்பு வழங்க வேண்டும். வாக்குப்பதிவு நாளன்று பணிக்கு வராத பணியாளர்களின் சம்பளத்திலிருந்து எவ்வித பிடித்தமும் செய்யக்கூடாது. இது தொடர்பாக சென்னை, தொழிலாளர் ஆணையர் வள்ளலார் உத்தரவின்படி, மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 1951 பிரிவு 135 பி யின்படி அனைத்து கடைகள் மற்றும் வர்த்தக நிறுவனங்கள், உணவு நிறுவனங்கள், மோட்டார் போக்குவரத்து நிறுவனங்களில் பணிபுரியும் (தினக்கூலி, தற்காலிக மற்றும் ஒப்பந்த தொழிலாளர்கள் உட்பட்டோர்) அனைத்து தொழிலாளர்களுக்கும் 06.04.2021 அன்று சம்பளத்துடன் கூடிய விடுமுறை அளிக்கப்படவேண்டும்.

மேலும் 135டி(1)-யின்படி தேர்தல் நடக்கும் தொகுதியை சாராத பணியாளர்களுக்கும், சம்பளத்துடன் விடுமுறை அளிக்க வேண்டும். விடுமுறை அளிக்கப்படாதது குறித்து புகார்கள் ஏதும் பெறப்படுமேயானால், உரிய சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்படுகிறது. இது குறித்து புகார்கள் தெரிவிக்க, தர்மபுரி மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு அறை (கன்ட்ரோல் ரூம்) கைப்பேசி எண்கள் 9442271235, 9994799224, 8883633363-யை தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.        

Related Stories:

>