×

204 வாக்குச்சாவடிகளில் சிசிடிவி கேமரா பொருத்த நடவடிக்கை

தர்மபுரி, ஏப்.2: தர்மபுரி மாவட்டத்தில் மிக பற்றமான 204 வாக்குச்சாவடிகளில் சிசிடிவி கேமரா பொருத்த முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடக்கிறது. தர்மபுரி மாவட்டத்தில் உள்ள 5 சட்டமன்ற தொகுதிகளில், 1817 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றில் 420 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என கண்டறியப்பட்டுள்ளது. அத்துடன் இதர வகையில் கண்காணிக்கப்பட வேண்டிய வாக்குச்சாவடிகளின் பட்டியலும் எடுக்கப்பட்டது. இதனையடுத்து மிக பதற்றமான 204 வாக்குச்சாவடிகளில், சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட உள்ளன. இதற்கான ஏற்பாடுகளை தேர்தல் நடத்தும் அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர். இந்த கேமராவில் பதிவுகளை ஆன்-லைன் மூலமாக கண்காணிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.

வாக்காளர்களின் சந்தேகங்களை குறித்து விளக்கம் பெறவும், வாக்காளர் பட்டியல் விவரங்கள் மற்றும் பெயர்கள் இடம் பெற்றுள்ளதா உள்ளிட்ட தகவல்களை பெறவும், புகார்கள் தெரிவிக்கவும் 04342 1950 என்ற கட்டணமில்லா எண் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும், கட்டணமில்லா தொலைபேசி எண் 1077 மற்றும் எஸ்எம்எஸ்  மூலம் தொடர்புகொள்ள 8903891077 என்ற எண்ணுள்ள செல்போனும், 24 மணி நேரமும் மாவட்ட தேர்தல் கட்டுப்பாட்டு அறையில் இயங்கி வருகிறது. மேலும் தேர்தல் ஆணையத்தின் சி-விஜில் ஆப் மூலமும் தேர்தல் விதிமீறல் குறித்த புகார் பெறப்படுகிறது என தேர்தல் பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர்.


Tags :
× RELATED திரவுபதியம்மன் கோயில் கும்பாபிஷேக பெருவிழா