திருவண்ணாமலை மாவட்டத்தில் வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு 3வது கட்ட தேர்தல் பயிற்சி 8 மையங்களில் நாளை நடக்கிறது

திருவண்ணாமலை, ஏப்.2: வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு 3வது கட்ட தேர்தல் பயிற்சி வகுப்பு நாளை (3ம் ேததி) நடக்கிறது. அப்போது, தபால் வாக்குகளை அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு வரும் 6ம் தேதி நடக்கிறது. அதையொட்டி, திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 8 தொகுதிகளில் பணிபுரிய 13,848 வாக்குச்சாவடி அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.இந்நிலையில், வாக்குச்சாவடி அலுவலர்களுக்கான முதற்கட்ட தேர்தல் பயிற்சி கடந்த மாதம் 17ம் தேதியும், இரண்டாவது கட்ட பயிற்சி வகுப்பு கடந்த 27ம் தேதியும் நடந்தது. அதைத்தொடர்ந்து, நாளை (3ம் தேதி) மூன்றாவது கட்ட பயிற்சி வகுப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை பயிற்சி வகுப்பு நடைபெறும்.

அதன்படி, செங்கம்(தனி) தொகுதிக்கு திருவண்ணாமலை அரசு கலை கல்லூரியிலும், திருவண்ணாமலை தொகுதிக்கு திருவண்ணாமலை சண்முகா தொழிற்சாலை மேல்நிலைப் பள்ளியிலும், கீழ்பென்னாத்தூர் தொகுதிக்கு கீழ்பென்னாத்தூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியிலும், கலசபாக்கம் தொகுதிக்கு கலசபாக்கம் செழியன் கல்வி நிறுவனங்களிலும் பயிற்சி வகுப்பு நடைபெறும்.அதேபோல், போளூர் தொகுதிக்கு போளூர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியிலும், ஆரணி தொகுதிக்கு சுப்பிரமணிய சாஸ்திரியார் மேல்நிலைப் பள்ளியிலும், செய்யாறு தொகுதிக்கு செய்யாறு அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியிலும், வந்தவாசி தொகுதிக்கு வந்தவாசி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியிலும் பயிற்சி வகுப்பு நடைபெறும்.தேர்தல் பயிற்சி வகுப்பில் பங்கேற்கும் ஆசிரியர் மற்றும் அரசு ஊழியர்கள் தபால் வாக்குகளை செலுத்த வசதியாக, ஒவ்வொரு பயிற்சி மையத்திலும் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

Related Stories:

>