தொட்டியத்தில் அரசு கல்லூரி அமைக்க நடவடிக்கை எடுப்பேன் திமுக வேட்பாளர் காடுவெட்டி தியாகராஜன் வாக்குறுதி

தொட்டியம், ஏப்.1: முசிறி தொகுதி திமுக வேட்பாளர் காடுவெட்டி தியாகராஜன் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். வேட்பாளர் காடுவெட்டி தியாகராஜன் காட்டுப்புத்தூர், சீத்தப்பட்டி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் திறந்த ஜீப்பில் சென்று உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார். அவர் பேசும்போது, தொட்டியம் பகுதியில் அரசு கல்லூரி அமைக்க வேண்டும் என்ற இப்பகுதி மக்களின் நீண்டநாள் கனவு நிறைவேறும் வகையில் அதற்கான முயற்சிகளை மேற்கொள்வேன்.

மேலும் விவசாயிகளின் பிரச்னைகளுக்கு துணையாக நான் இருப்பேன்.

உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து என்னை சட்டசபைக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று பேசினார். மேலும் அப்பகுதியில் உள்ள விவசாய சங்க பிரதிநிதிகளை சந்தித்து வாக்குகள் கேட்டார். அவருக்கு விவசாயிகள் சால்வை அணிவித்து வரவேற்றனர். ஒன்றிய செயலாளர் திருஞானம், நகர செயலாளர் கங்கா மனோகரன், நிர்மலா சந்திரசேகரன், ஒன்றியக் குழுத் தலைவர் புனித ராணி, துணைத் தலைவர் சத்தியமூர்த்தி, நிர்வாகிகள் எஸ். கே. எஸ் .பழனிவேலு,சரவணன், ஆறுமுக ராஜா,உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

Related Stories: