மணப்பாறை பகுதியில் தொழிற்சாலைகள் அமைக்க நடவடிக்கை எடுப்பேன்

மணப்பாறை. ஏப். 1: மணப்பாறை சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் திமுக கூட்டணி கட்சியான மனிதநேய மக்கள் கட்சிகளின் வேட்பாளர் அப்துல்சமது நேற்று மணப்பாறை நகரபகுதிகளான பொத்தமேட்டுப்பட்டி ,தர்மலிங்கம் தெரு, முத்தன் தெரு, தீராம்பட்டி, மஞ்சம்பட்டி உள்பட 37 இடங்களில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது, அப்துல் சமது பேசும்போது, மணப்பாறை பகுதியில் தொழிற்சாலைகள் அமைத்து இளைஞர்களுக்கு, வேலை வாய்ப்பை உருவாக்கி தருவேன். இதனால், வேலை தேடி இப்பகுதி இளைஞர்கள் கோவை, ஈரோடு, திருப்பூர் செல்லும் நிலைமை ஏற்படாது என்று கூறி உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெற வைக்க வேண்டும் என பேசினார்.

முன்னதாக பொத்தமேட்டுப்பட்டியில் முறுக்கு தொழிலாளர்களிடம் ஆதரவு திரட்டிய வேட்பாளர் அப்துல்சமது தானும் முறுக்கு பிழிந்து கூடியிருந்த தொழிலாளர்களிடையே வியப்பை ஏற்படுத்தினார். திமுக கூட்டணி கட்சி நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.

Related Stories: