×

திருவெறும்பூர் பகுதியில் அதிமுக வேட்பாளர் குமார் தீவிர வாக்குசேகரிப்பு

திருவெறும்பூர், ஏப்.1: திருவெறும்பூர் அதிமுக வேட்பாளர் குமார் திருவெறும்பூர் பகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். திருவெறும்பூர் தொகுதி அதிமுக வேட்பாளர் குமார் தொகுதிக்குட்பட்ட அனைத்து பகுதிகளுக்கும் சென்று தீவிரமாக வாக்குசேகரித்து வருகிறார். நேற்று மாலை எச்ஏபிபி மெயின் கேட் தொழிலாளர்களை சந்தித்தார். தொடர்ந்து இலந்தப் பட்டி, காந்தலூர், பெரிய சூரியூர், சின்ன சூரியூர், போலீஸ் காலனி, அண்ணா நகர் உள்ளிட்ட பகுதியில் இரட்டை இலை சின்னத்திற்குவாக்கு சேகரித்தார். அப்போது எச்ஏபிபி நிறுவனத்தை கார்ப்பரேட் நிறுவனமாக மாற்றுவதற்கு அனுமதிக்க மாட்டோம் என்றும், மேலும் தொழிலாளர்களுக்காக அதிமுக அரசு தொடர்ந்து பாடுபடும் என்று கூறி வாக்குசேகரிப்பில் ஈடுபட்டார்.

ஒன்றிய செயலாளர்கள் கும்பக்குடி கோவிந்தராஜன், ராவணன், திருவெறும்பூர் பகுதி செயலாளர் பாஸ்கர், பேரூர் கழக செயலாளர் முத்துக்குமார் | நிர்வாகிகள் நிதி சதீஷ்குமார், அழகர் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
முன்னதாக வேட்பாளர் குமாருக்கு பொதுமக்கள் ஆரத்தி எடுத்து, பூரண கும்ப மரியாதை கொடுத்து உற்சாகமாக வரவேற்றனர். விவசாயிகளுக்கு என்றும் பக்கபலமாக இருப்பேன் தொட்டியம், ஏப்.1: முசிறி சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் செல்வராசு எம்எல்ஏ தொட்டியம், காட்டுப்புத்தூர், உள்ளிட்ட பல்வேறு கிராம ஊராட்சி பகுதிகளில் ஆதரவாளர்களுடன் சென்று தீவிர பிரசாரம் செய்து வருகிறார். தொட்டியம் பகுதியில் நேற்று பிரசாரத்தின்போது வேட்பாளர் செல்வராசு பேசியதாவது:

தொட்டியம், முசிறி பகுதி விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கையான பாசன வாய்க்கால்களின் தலைப்பு மாயனூர் கதவணை பகுதியில் மாற்றி அமைக்கப்படும். விவசாய குடும்பத்தை சேர்ந்த நான் விவசாயிகளுக்கு என்றும் பக்கபலமாக இருப்பேன். தமிழக முதல்வர் ஏற்கனவே உங்களிடம் வாக்குறுதி அளித்து சென்றுள்ளார். அந்த வாக்குறுதிகளை வருங்காலத்தில் உங்களுக்கு நிறைவேற்றித் தர இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து என்னை வெற்றிபெற செய்து, மீண்டும் அதிமுக ஆட்சி மலர வாய்ப்பளிக்க வேண்டும் என்று கூறினார். வேட்பாளருக்கு பொதுமக்கள் சிறப்பான வரவேற்பு அளித்தனர். முன்னாள் அமைச்சர் சிவபதி, முன்னாள் எம்எல்ஏ ரத்தினவேல், ஒன்றிய செயலாளர்கள் பால்மணி, பிரகாசவேல், நகர செயலாளர் திருஞானம், ராமசந்திரன்,நிர்வாகிகள் ஸ்வீட் ராஜா, சுபத்ரா, மனோகரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags : AIADMK ,Kumar ,Thiruverumbur ,
× RELATED கேரளாவில் எதிர்க்கட்சியினர்...