மேற்குதொகுதிக்குட்பட்ட எ.புதூரில் கே.என்.நேருவுக்கு ஆதரவாக சகோதரர் வாக்குசேகரிப்பு

திருச்சி, ஏப். 1: திருச்சி மேற்கு தொகுதிதிமுக வேட்பாளரும்  முதன்மை செயலாளருமான கே.என்.நேரு திருச்சி மாவட்டத்தில் உள்ள 9 தொகுதிகளிலும் திமுக, கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக தீவிர பிரசாரம் செய்து வருகிறார்.

இந்நிலையில் திருச்சி மேற்கு தொகுதியில் வேட்பாளர் கே.என்.நேருவிற்கு ஆதரவாக எடமலைப்பட்டிபுதூரில் வேலைவாய்ப்பு இல்லாத இளைஞர்களுக்கான ஆலோசனை கூட்டம் நடந்தது. இக்கூட்டத்தில் கே.என்.நேருவின் சகோதரரும் தொழிலதிபருமான கே.என்.ரவிசந்திரன், மாநகர செயலாளர் அன்பழகன், கே.என்.மணிவண்ணன் ஆகியோர் தலைமை வகித்தனர்.

இதில் திமுக ஆட்சி அமைந்தவுடன் வேலை வாய்ப்பு இல்லாத இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு ஏற்படுத்திட நடவடிக்கை எடுப்பது குறித்து விவாதிக்கப்பட்டது. தொடர்ந்து கே.என்.நேருவுக்கு ஆதரவாக தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டனர். கூட்டத்தில் பாதிரியார் கஸ்பர், மாவட்ட துணை செயலாளர் முத்துசெல்வம் உள்ளிட்ட கட்சியினர் கலந்து கொண்டனர்.

Related Stories:

>