அதிகரிக்கும் தொற்றால் இன்று முதல் திருச்சியில் கொரோனா பரிசோதனை

திருச்சி, ஏப்.1 : அதிகரிக்கும் தொற்றால் திருச்சியில் இன்று முதல் கொரோனா பரிசோதனை செய்ய சுகாதாரத்துறை திட்டமிட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று அதிகரித்து கொண்டே வருகிறது. தினசரி கொரோனா பாதிப்பு 2 ஆயிரத்திற்கு மேல் பதிவாகி வருகிறது. இதனால் கொரோனா தொற்று நடவடிக்கைகளை தீவிரப்படுத்த தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. குறிப்பாக கொரோனா சோதனை அதிகரிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து திருச்சி மாவட்டத்தில் தினசரி 4 ஆயிரம் பேருக்கு கொரோனா சோதனை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியதாவது :

கடந்த மாதங்களில் திருச்சியில் தினசரி 2 ஆயிரம் சோதனை செய்யப்பட்டது. இதன்பிறகு 3 ஆயிரம் பரிசோதனையாக அதிகரிக்கப்பட்டது. தற்போது தினசரி 4 ஆயிரம் சோதனைகள் செய்ய இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. திருச்சி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் உள்ள கொரோனா பரிசோதனை மையம் முழு வீச்சில் செயல்டும் வகையில் மாற்றியமைக்கப்படவுள்ளது. இங்கு தினசரி 3,500 பரிசோதனைகள் வரை செய்ய முடியும். இதைத்தவிர்த்து 17 தனியார் சோதனை மையங்களிலும் கொரோனா சோதனை செய்யப்படுகிறது. திருச்சி புறநகர் பகுதிகளை விட மாநகராட்சி பகுதிகளில் தான் கொரோனா தொற்று அதிகமாக உள்ளது. தற்போது உள்ள தொற்றுகளில் 70 சதவீதம் மாநகராட்சி பகுதிகளில் தான் உள்ளது. மாநகராட்சி பகுதியில் மட்டும் தினசரி 2,000 பரிசோதனைகள் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

மாநகராட்சியுடன் இணைந்து இந்த மாதிரிகள் சேகரிக்கப்படும். இதை சேர்த்து தடுப்பூசி போடும் பணியும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. தற்போது வரை 1.06 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டது. இதை அதிகப்படுத்த தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது. கொரோனா தடுப்பு விதிமுறை முறையாக கடைபிடிப்பது தொடர்பாக அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர். கட்டுப்பாட்டு பகுதிகள் திருச்சியில் ேநாய் கட்டுப்பாட்டு பகுதிகள், தொற்று பாதிப்பு உள்ளவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள், வணிக வளாகங்கள், மார்கெட்டுகள் உள்ளிட்ட இடங்களில் மாதிரிகளை சேகரித்து பரவலை கண்டறிய திட்டமிடப்பட்டுள்ளது. குறிப்பாக விதிகளை மீறுபவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்படவுள்ளது.

Related Stories:

>