மண்ணச்சநல்லூர் தொகுதி திமுக வேட்பாளர் கதிரவனை ஆதரித்து கே.என். நேரு பிரசாரம்

மண்ணச்சநல்லூர், ஏப்.1: மண்ணச்சநல்லூர் தொகுதி திமுக வேட்பாளர் கதிரவனை அதரித்து திமுக முதன்மை செயலாளர் நேரு பிரசாரம் செய்தார். மண்ணச்சநல்லூர் தொகுதியில் உள்ள குருவம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் பிரசாரத்தின்போது கே.என்.நேரு பேசியதாவது: திமுக தலைவர் ஸ்டாலின் தமிழக மக்களுக்கு 7 வாக்குறுதிகள் அளித்துள்ளார். அதனை மனதில் கொண்டு திமுகவுக்கு அனைவரும் வாக்களிக்க வேண்டும். குடும்பத்தலைவிகளுக்கு மாதம் 1000 உரிமைத்தொகை, கேஸ் சிலிண்டருக்கு 100 மானியம், விவசாயிகளுக்கு எதிரான சட்டங்கள் ரத்து செய்யப்படும். நீட் தேர்வு ரத்து செய்யப்படும் போன்ற வாக்குறுதிகளை திமுகவால் மட்டுமே நிறைவேற்ற முடியும் என்று பேசினார்.

தொடர்ந்து வேட்பாளர் கதிரவன் பூனாம்பாளையம், வடக்கிப்பட்டி, தீராம்பாளையம், சிப்பாய்பண்ணை, ராசாம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் பிரசாரம் செய்து வாக்கு சேகரித்தார். வேட்பாளருடன் அருண்நேரு, மாவட்ட அவைத்தலைவர் அம்பிகாபதி, ஒன்றிய செயலாளர் செந்தில், ஒன்றிய சேர்மன் தர், துணைசேர்மன் செந்தில், ஒன்றிய பொருளாளர் குமார், சீனிவாச பெருமாள், மதிமுக மாவட்ட செயலாளர் டிடிசி சேரன், நகர பொதுக்குழு உறுப்பினர் கோழிக்கடை சுரேஷ்குமார் உள்பட பலர் உடனிருந்தனர்.

Related Stories: