வேகத்தடைக்கு வெள்ளை வர்ணம் திருவாரூர் மாவட்டத்தில் திமுக, கூட்டணி வெற்றிக்காக பூசாரிகள் நல சங்கம் பாடுபடும்

திருவாரூர், ஏப்.1: திருவாரூர் மாவட்டத்தில் திமுக மற்றும் கூட்டணி கட்சிகளின் வெற்றிக்காக பூசாரிகள் நல சங்கம் பாடுபடும் என மாநிலத் தலைவர் வாசு தெரிவித்துள்ளார். திருவாரூர் தொகுதியின் திமுக வேட்பாளரும், மாவட்ட செயலாளருமான பூண்டி கலைவாணனை நேற்று கொரடாச்சேரி அவரது இல்லத்தில் தமிழக பூசாரிகள் நல சங்கத்தின் தலைவர் வாசு மற்றும் பொறுப்பாளர்கள் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர். பின்னர் வாசு கூறுகையில், பூசாரிகளின் நீண்ட நாள் கோரிக்கையான மாத ஊதியம் உயர்வு, ஓய்வூதியம் உட்பட பல்வேறு கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது தேர்தல் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

அதன்படி மாத ஊதியம் ரூ.2,000, ஓய்வூதியம் ரூ.4 ஆயிரம், அரசு கட்டுப்பாட்டில் பணியாற்றி வரும் பூசாரிகள் முழுநேர ஊழியர்களாக மாற்றப்படுவது, கோயில்களுக்கு திருப்பணி மேற்கொள்ள ரூ.ஆயிரம் கோடி நிதி என பல்வேறு திட்டங்களை அறிவித்து பூசாரிகளின் வாழ்க்கையில் ஒளி ஏற்றி உள்ளார். இதனையடுத்து மாநிலம் முழுவதும் இருந்து வரும் பூசாரிகள் குடும்பத்தை சேர்ந்த சேர்ந்த 7 லட்சம் குடும்பத்தினரும் திமுகவிற்கு ஆதரவு அளித்து வாக்களிப்பது என ஏற்கனவே முடிவு செய்துள்ளோம். இதுமட்டுமின்றி மாநிலம் முழுவதும் 234 தொகுதிகளிலும் திமுக மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்கள் வெற்றி பெறுவதற்கு பூசாரிகள் சங்கத்தின் சார்பில் வாக்கு சேகரிப்பது மட்டுமின்றி துண்டுபிரசுரங்கள் போன்றவையும் வழங்கப்பட்டு வருகின்றன.

அதன்படி திருவாரூர் மாவட்டத்தில் 4 எம்எல்ஏ தொகுதிகளிலும் திமுக மற்றும் கூட்டணிக் கட்சிகள் வெற்றி பெற பாடுபடுவோம். மேலும் வரும் தேர்தலில் திமுக மற்றும் கூட்டணிக் கட்சிகள் அமோக வெற்றி பெறுவது தற்போதே உறுதியாகிவிட்டது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு வாசு தெரிவித்துள்ளார்.

Related Stories:

>