பரவாக்கோட்டை ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு புதிய நவீன கட்டிடம் மன்னார்குடி திமுக வேட்பாளர் டிஆர்பி ராஜா உறுதி

மன்னார்குடி, ஏப்.1: மன்னார்குடி தொகுதி திமுக வேட்பாளர் டிஆர்பி ராஜா மேலநத்தம் ஊராட்சியில் இருந்து பிரசாரத்தை துவக்கி, தொடர்ந்து, கோட்டூர் வடக்கு ஒன்றியத்திற்குட்பட்ட திருமக்கோட்டை, சேரி, கண்டமங்கலம், மன்னை மேற்கு ஒன்றியத்திற்குட்பட்ட கூப்பாட்சிக்கோட்டை, பரவாக்கோட்டை உள்ளிட்ட 5 ஊராட்சிகளில் பிரசாரம் மேற்கொண்டு மு.க.ஸ்டாலின் தலைமையில் நல்லாட்சி அமைந்திட உதயசூரியன் சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டுகோள்விடுத்தார்.

அப்போது, டிஆர்பி ராஜா பேசுகையில், திருமேனி, மன்னை நகரில் வசிக்கும் நரிக்குறவர் இன மக்களுக்கு கான்கிரீட் வீடுகள் கட்டித்தரப்படும். திருமக்கோட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு உபகரணங்கள் வழங்கப்பட்டு 24 மணி நேரமும் செயல்பட நடவடிக்கை எடுக்கப்படும். பரவாக்கோட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு புதிய நவீன கட்டிடம் கட்டித்தரப்படும்.

மன்னார்குடியில் நம்மாழ்வார் பெயரில் விவசாய கல்லூரி அமைக்கப்படும். உரத்தட்டுப்பாடு ஏற்படாமல் இருக்க உரக்கிடங்கு அமைக்கப்படும் என்றார். ஒன்றிய செயலாளர்கள் மேலவாசல் தன்ராஜ், பாலஞானி, முன்னாள் மாவட்ட துணைச்செயலாளர் முத்துவேல், கோட்டூர் ஒன்றியக்குழு தலைவர் மணிமேகலை முருகேசன், மதிமுக ஒன்றிய செயலாளர் சிவா கதிரவன் உள்ளிட்ட திமுக, கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

Related Stories:

>