பேராவூரணி தொகுதி மேம்படுத்தப்படும் திமுக வேட்பாளர் அசோக்குமார் வாக்குறுதி

சேதுபாவாசத்திரம், ஏப்.1: பேராவூரணி தொகுதியில் போட்டியிடும், திமுக வேட்பாளர் அசோக்குமார் சேதுபாவாசத்திரம் வடக்கு ஒன்றியம் துறையூர், குருவிக்கரம்பை, நாடியம், பிள்ளையார் திடல், மணத்திடல், பள்ளத்தூர், மல்லிப்பட்டினம், ராமர் கோவில் தெரு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் சேகரித்து வருகிறார். அப்போது அவர் பிள்ளையார் திடல் மீனவ கிராமத்தில் பேசியதாவது: சேதுபாவாசத்திரம் ஒன்றியத்தில் பல்வேறு இடங்களில் சுற்றுப்பயணம் செய்து வருகின்றேன். சாலைகள் பயனற்ற வகையில் குண்டும், குழியுமாக உள்ளது. கடந்த பல ஆண்டுகளாக அந்த அதிமுக எம்எல்ஏ இப்பகுதியில் எவ்வித அடிப்படை வசதிகளையும் செய்து தரவில்லை. கர்ப்பிணி பெண்களுக்கு செலவு வைக்கக் கூடாது என்று சாலையை புதுப்பிக்காமல் வைத்துள்ளனர். இந்த சாலையில் பயணம் செய்தால் கர்ப்பிணி பெண்களுக்கு சுகப்பிரசவம் ஏற்பட்டுவிடும்.

திமுக ஆட்சிக்கு வந்ததும் மாநிலத்திலேயே மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ள பேராவூரணி தொகுதி கிராமங்களில் சாலை, குடிநீர், மின்சாரம் உள்ளிட்ட அடிப்படை கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்படும் என்றார். வேட்பாளருடன் காங்கிரஸ் மாநில துணைத் தலைவர் ராஜாதம்பி, முன்னாள் எம்எல்ஏ சிங்காரம், முன்னாள் மாவட்ட துணை செயலாளர் செல்வராசு, சேதுபாவாசத்திரம் வடக்கு ஒன்றிய பொறுப்பாளர் முத்துமாணிக்கம்,முன்னாள் ஒன்றியகுழு தலைவர் ராஜரெத்தினம், முன்னாள் பேராவூரணி ஒன்றிய செயலாளர் சேகர் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர்.

Related Stories:

>