அறந்தாங்கி ஒன்றியத்தில் 12 குறுவளமையங்களில் கொரோனா தடுப்பு விழிப்புணர்வு கூட்டம்

அறந்தாங்கி, ஏப்.1: புதுக்கோட்டை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் வழிகாட்டுதலின் படி அறந்தாங்கி ஒன்றியத்துக்கு உட்பட்ட 12 குறுவள மையங்களிலும் அனைத்து ஆசிரியர்களுக்கும் கொரோனா விழிப்புணர்வு குறித்த கூட்டம் நடைபெற்றது. அறந்தாங்கி மாதிரி மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் தெய்வகனி துவக்கி வைத்தார்.அரசு உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் வீரையா முன்னிலை வகித்தார்.அறந்தாங்கி வட்டார வளமைய மேற்பார்வையாளர் (பொ)சிவயோகம் வரவேற்றார். ஆசிரியர் பயிற்றுனர் செல்வராஜ் நன்றி கூறினார்.கூட்டத்தில் தடுப்பூசி போட்டுக் கொள்வது குறித்து விழிப்புணர்வு கொடுக்கப்பட்டது.

அனைத்து ஆசிரியர்களும் கொரோனா தடுப்பூசி எடுத்துக் கொள்வது குறித்தும் கூறப்பட்டது. இதில் அனைத்து அரசு பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.கூட்டத்திற்கான அனைத்து ஏற்பாடுகளையும் குறுவளமைய பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் அனைத்து ஆசிரியர் பயிற்றுநர்கள் செய்திருந்தனர்.

Related Stories:

>