புதுக்கோட்டை திமுக வேட்பாளர் முத்துராஜா தீவிர வாக்கு சேகரிப்பு

புதுக்கோட்டை, ஏப். 1: புதுக்கோட்டை சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளராக டாக்டர் முத்துராஜா போட்டியிடுகிறார். இவர் கடந்த 10 நாட்களுக்கு மேலாக தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில் நேற்று புதுக்கோட்டை வடக்கு மாவட்ட பொறுப்பாளர் செல்லபாண்டியன் ஆலோசனையின்படி புதுக்கோட்டை நகர செயலாளர் நைனா முகமது தலைமையில் மருத்துவமனை அருகில் இருந்து ஆரம்பித்து 26, 21, 20, 28, 27 ஆகிய வார்டுகளில் திமுக வேட்பாளர் முத்துராஜா வாக்கு சேகரித்தார். அப்போது பொதுமக்கள் மத்தியில் திமுக ஆட்சியமைக்க உதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்க வேண்டும் என்றார்.

இதைதொடர்ந்து புதுக்கோட்டை ஒன்றிய செயலாளர் தலைமையில் 9A நத்தம்பண்ணை, 9B நாத்தம்பண்ணை, கவிநாடு மேற்கு, கவிநாடு கிழக்கு, திருமலைராயசமுத்திரம் ஆகிய ஊராட்சிகளில் திமுக வேட்பாளர் முத்துராஜா வாக்கு சேகரித்தார். அப்போது கூட்டணி கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் உடனிருந்தனர்.

Related Stories:

>