பெரம்பலூர், குன்னம் தொகுதியில் வாக்குச்சாவடியில் பணிபுரிவோருக்கு தேர்தல் அடையாள பேட்ஜ்கள் தயார்

பெரம்பலூர், ஏப்.1: பெரம்பலூர் (தனி), குன்னம் சட்டமன்ற தொகுதிகளில் தேர்தல் கண்காணிப்புப் ப ணிகளில் ஈடுபடும் அதிகாரிகள் மற்றும் மொத்தமுள்ள 816 வாக்குச்சாவடிகளில் தேர்தல் பணிகளில் ஈடுபடுவோருக்கு, தேர்தல் ஆணையத்தால் வழங்கப்படும் அ டையாள பேட்ஜ்கள் தயார் நிலையில் வைக்கப் பட்டுள்ளன. பெரம்பலூர் மாவட்டத் தேர்தல் அலுவலரான கலெக்டர், தேர்தல் (பொது) பார்வை யாளர் 2பேர், தேர்தல் செலவினப் பார்வையாளர், தேர்தல் காவல் பார்வையாளர், மாவட்ட கூடுதல் தேர்தல் அ லுவலரான, மாவட்ட வருவாய் அலுவலர், கலெக்டரின் நேர்முக உதவியாளர், சட்ட மன்றத் தொகுதிகளுக்கான தேர்தல் நடத்தும் அலுவலர்கள்,

முதன்மை உதவித் தேர்தல் நடத்தும்அலுவலர்கள், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள், தாசில்தார்கள், மத்திய அரசு நிறுவனங்களில் இருந்து பதட்டமான வாக்குச் சாவடிகளுக்காக நியமிக்கப் பட்டுள்ள நுண் பார்வையாளர்கள், வாக்குச் சாவடி நிலைஅலுவலர்கள், கோவிட்-19 மருத்து வக் குழுவினர் ஆகியோர் தேர்தல் நடைபெறும் ஏப்ரல் 6ம் தேதியன்றும், மே 2ம் தேதியும் அணிவதற்கான பேட்ஜ்கள் பெரம்பலூர் மாவட்ட கலெக்டர்அலுவலக குறைதீர் கூட்ட அரங்கில் தயார் நிலையில் வைக்கப் பட்டுள்ளன.

Related Stories:

More
>