×

பெரம்பலூர் மாவட்டத்தில் வாக்காளர்களுக்கு தகவல் சீட்டு வழங்கும் பணி துவக்கம்

பெரம்பலூர்,ஏப்.1: சட்டமன்ற பொதுத் தே ர்தலை முன்னிட்டு வாக்காளர்களுக்கு வாக்களித்திட ஏதுவாக வாக்காளர் தக வல் சீட்டு வழங்கும் பணி நடைபெற்று வருகிறது. பெரம்பலூர் (தனி)சட்டமன் றத் தொகுதியில் 9 வேட்பாளர்களும், குன்னம் தொகு தியில் 22 வேட்பாளர்களும் களத்தில் உள்ளனர். பெரம்பலூர் மாவட்டத்தில் பெரம் பலூர் (தனி) சட்டமன்ற தொகுதியில் 165 இடங்களில் 428 வாக்குச்சாவடி மையங் கள் அமைக்கப்பட்டு, 3,02,6 92 வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். குன்னம் சட் டமன்றத் தொகுதியில் 177 இடங்களில் 388 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப் பட்டு 2,73,461 வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். இவர்களுக்கு 31ம்தேதி முதல் ஏப்ரல் 2ம் தேதிவரை வாக்காளர் தகவல் சீட்டு வீடு தேடிவந்து வழங்கும்பணி கள் நேற்று முதல் தொடங்கி உள்ளது.

பெரம்பலூர் தொகுதியில் வாக்காளர்களுக்கு வாக்காளர் தகவல் சீட்டு வழங் கும் பணியில் 33 மேற்பார்வையாளர்கள், 161 பொறுப்பு அலுவலர்கள் மற்றும் 332 வாக்குச்சாவடி நிலை அலுவலர்களும், குன்னம் சட்டமன்ற தொகுதியில் 31 மேற்பார்வையாளர்கள், 174 பொறுப்பு அலுவலர்கள் மற்றும் 320 வாக்குச்சாவடி நி லை அலுவலர்களும் வழங் கிட ஏற்பாடு செய்யப் பட்டு ள்ளது. வாக்காளர் தகவல் சீட்டில் வாக்காளரின் பெய ர், பாலினம், தந்தை, கணவர் பெயர், சட்டமன்ற தொகு தியிலான பெயர், பாகம் எண், வாக்காளர் அடையாள அட்டை எண், வரிசை எண், மையத்தின் எண், வா க்குப்பதிவு நடைபெறும் நாள் மற்றும் முகவரி இடம்பெ ற்றிருக்கும். மேலும் வாக்காளர் அடையாள சீட்டின் பின்புறம் வாக்காளர்களுக்கு பயன்படும் வகையில் வாக்குச்சாவடி நிலை அலு வலரின் பெயர் மற்றும் கை பேசி எண்ணும் இடம் பெற்றிருக்கும்.

Tags : Perambalur district ,
× RELATED பெரம்பலூர் மாவட்ட கலெக்டர்...