ஜெயங்கொண்டம் அருகே அருள்மொழி கிராமத்தில் மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம்

ஜெயங்கொண்டம், ஏப்.1: ஜெயங்கொண்டம் அருகே அருள்மொழி கிராமத்தில் மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம் நேற்று நடைபெற்றது. இக் கோயிலில் கடந்த 28ம் தேதி முதல் கணபதி ஹோமம் நவக்கிரக ஹோமம் யாக பூஜைகள், பந்தனம் யாத்ரா தானம் நடைபெற்று முடிந்தது. நேற்று காலை 9.30 மணியளவில் சிவாச்சாரியார்கள் யாகசாலையில் வைத்து இருந்த புனிநீர் கலசங்களை தலையில் சுமந்து கோயிலை வலம் வந்து, சிவாச்சாரியார்கள் வேத மந்திரம் முழங்க சுந்தரேஸ்வரர் கோயில் மூலஸ்தான விமான கலசத்திற்கு 10 மணியளவில் புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது.

பின்னர் மீனாட்சி சுந்தரேஸ்வரருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடந்தது. புரந்தான், கோவிந்தபுத்தூர், அறங்கோட்டை, சுத்தமல்லி, கோடங்குடி, கோரைகுழி, ஆகிய பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். கும்பாபிஷேக ஏற்பாடுகளை 105 வயதான முத்தையன் தலைமையில் விழா கமிட்டியினர் கிராம மக்கள் செய்திருந்தனர்.

Related Stories:

More