×

குடியாத்தம் தொகுதியில் சின்னம் ெபாருத்தும் பணியை பொதுப்பார்வையாளர் ஆய்வு

பேரணாம்பட்டு, ஏப்.1: குடியாத்தம் தனி தொகுதியில் வாக்குப்பதிவு இயந்திரங்களில் வேட்பாளர்களின் பெயர், சின்னம் பொருத்தும் பணி பொதுப்பார்வையாளர் நேற்றுமுன்தினம் ஆய்வு செய்தார்.வேலூர் மாவட்டம் குடியாத்தம் தொகுதிக்குட்பட்ட பேரணாம்பட்டு தாலுகா அலுவலகத்தில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ளது. இந்த இயந்திரங்களில் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களின் பெயர், சின்னம் உள்ளிட்டவைகள் அடங்கிய சீட்டுகள் ஒட்டும் பணி நேற்று முன்தினம் தொடங்கியது. இப்பணிகளை பொதுப்பார்வையாளர் விபுல் உஜ்வால் ஆய்வு செய்தார்.

அப்போது, வாக்குப்பதிவு இயந்திரத்தில் ஏதேனும் குறை ஏற்பட்டால் அதனை சீரமைப்பது எப்படி என பெல் நிறுவன தொழில்நுட்ப பிரிவு பொறியாளர் பங்கேற்று தேர்தல் பணியில் ஈடுபடும் அரசு ஊழியர்களுக்கு செயல்விளக்கம் செய்து காண்பித்தனர். ஆய்வின்போது, தேர்தல் அலுவலர் ஷேக் மன்சூர், பேரணாம்பட்டு தாசில்தார் கோபி மற்றும் தேர்தல் பணி சார்ந்த அலுவலர்கள் இருந்தனர்.

Tags : Gudiyatham ,
× RELATED வாக்குச்சாவடி மையத்திற்குள் வாக்கு...