பெரம்பலூர் அடுத்த மங்களம் கிராமத்தில் விளையாட்டு மைதானம் ஆக்கிரமிப்பு நடவடிக்கை கோரி தேர்தல் புறக்கணிப்பு

பெரம்பலூர், ஏப்.1: பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை தாலுகா, தேவையூர் ஊராட்சிக்கு உட்பட்ட மங்களம் கிராமத்தினர் ஊராட்சி துணைத் தலைவர் சூரியபிரகாஷ் உள்ளிட்ட 40க்கும் மேற்பட்டோர் நேற்று பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு திரண்டு வந்து முற்றுகையிட்டனர். பிறகு கலெக்டர் அலுவலகத்தில் அளித்தப் புகார் மனுவில் தெரிவித்திருப்பதாவது: மங்களம் கிராமத்தில் தாழ்த்தப்பட்ட மக்களுக்காக பூர்வீகமாக காளியம்மன் கோ வில் உள்ளது. எஸ்சி பிரிவினரில் கிழக்குத்தெரு, வடக்குத்தெரு, மேலத்தெரு, நடுத்தெரு என 4 தெருக்கள் உள்ளன. மங்களம் கிராமத்தில் இதுநாள்வரை மக்கள் ஒன்றாக ஒற்றுமையாக சாமிதரிசனம் செய்து வந்தனர்.

தற்போது மேலத்தெருவில் உள்ளவர்கள் காளியம்மன் கோயிலை இரண்டாக பிரி வினை செய்து பொதுமக்களுக்காக உருவான விளையாட்டு மைதானம், வாரசந் தை, தானியக்களம் இருக்குமிடத்தில் புதிதாக நடமாட முடியாத வகையில் ஆக்கிரப்பு செய்து, வில்லியம், சூலம்நட்டு கற்சிலையை வைத்து பெண்கள் நடமாட முடியாத வகையில் ஆக்கிரமிப்பு செய்து, இரு சமூகத்தினரிடையே கலவரம் ஏற்படும் வகையில், தனிநபர் 6 பேர் வகையராக்கள் செயல்படுகிறார்கள். இதுபற்றி ஒரு தெருவை சேர்ந்த முக்கியஸ்தர்கள் கேட்டதற்கு தீண்டாமை வழக்கு போடுவோம் எனக்கூறி மரியாதை குறைவான வார்த்தைகளால் திட்டுகிறார்கள்.

எனவே மாவட்ட கலெக்டர் மங்களம் கிராமப் பொது மக்களிடம் விசாரித்து தவறிழைத்தவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண் டும், இல்லாவிட்டால் தேர்தலை புறக்கணிப்போம் என அந்தப் புகார் மனுவில் தெரி வித்துள்ளனர்.

Related Stories:

>