காங்கயம் தெற்கு ஒன்றியத்தில் மு.பெ.சாமிநாதன் தீவிர வாக்கு சேகரிப்பு

காங்கயம், ஏப்.1:  காங்கயம் தொகுதி திமுக வேட்டபாளர் மு.பெ.சாமிநாதன் காங்கயம் தெற்கு ஒன்றியத்துக்குட்பட்ட குழந்தைகவுண்டன் வலசு, அவினாசிபாளையம்புதூர், ஜெ.ஜெ.நகர், துண்டுகாடு, வட்டமலை, பொத்திபாளையம், சி.எஸ்.ஐ. காலனி, காடைஈஸ்வரன்கோவில், கல்லாங்காடு புதூர், கொள்ளுக்காடு காலனி, அமர்ஜோதி நகர் காலனி, கவுண்டம்பாளையம், குதிரைபள்ளம், சத்யா நகர், ராமபட்டினம், சிக்கரசம்பாளையம், நல்லிபாளையம், புதுகாலனி, ஆணைக்குழிமேடு, காட்டுப்புதூர், சாவடிபாளையம், ராசபாளையம், கோவில்பாளையம், வேலாயுதம்பாளையம், பொன்னியகவுண்டன்புதூர், அரசம்பாளையம், பெருமாள்மலை, காட்டுப்புதூர், குருக்கத்தி, சிவன்மலை உள்பட 50க்கும் மேற்பட இடங்களில் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார். அப்போது அவர் பேசுகையில், ‘‘ஆவின் பால் விலை லிட்டருக்கு 3 ரூபாய் குறைக்கப்படும். அண்ணா மறுமலர்ச்சி திட்டம், நமக்கு நாமே திட்டம் ஆகியவற்றைக்கு புத்துயிர் ஊட்டப்பட்டு நடைமுறைப்படுத்தப்படும். கிராமங்களில் வேலைவாய்ப்பு இல்லாத பட்டதாரிகள் மற்றும் பட்டதாரிகள் கொண்ட சுயசேவை வேலைவாய்ப்பு குழுக்களை அமைத்து அந்த குழுக்களின் மூலம் கிராமங்களுக்கான அடிப்படை கட்டமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படும்.

இந்து சமய அறநிலைத்துறை கோவில்களில் பணியாற்றும் பகுதிநேர மற்றும் ஒப்பந்த முறை பணியாளர்களை முழுநேர அரசு ஊழியர்களாக ஆக்கப்பட்டு காலமுறை ஊதியம் இதர படிகள் மற்றும் ஓய்வூதியம் வழங்கப்படும். சிலிண்டருக்கு 100 ரூபாய் மானியம் வழங்கப்படும். மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு வழங்கப்படும் நிலுவையில் உள்ள கூட்டுறவு வங்கி கடன் தொகைகள் தள்ளுபடி செய்யப்படும். மகளிர் சுய உதவிக்குழுக்கள் உற்பத்தி செய்யும் பொருட்களை விற்பனை செய்யும் பூமாலை திட்டம் செயல்படுத்தப்படும். பொறியியல் மருத்துவம், வேளாண்மை ஆகிய தொழில் கல்வி பயில ஒற்றைச்சாளர முறையில் தேர்ந்தெடுக்கப்படும் முதல் தலைமுறை ஏழை மாணவர்கள் அனைவருக்கும் சாதி மத வேறுபாடின்றி கல்வி செலவை அரசு வழங்கும் என்ற கலைஞரின் திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்படும். திமுக தேர்தல் அறிக்கை தமிழக மக்கள் அனைவருக்கும் பயன்படும் வகையில் உள்ளது. எனவே அனைவரும் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்களித்து வெற்றிபெற செய்யவேண்டும் என கேட்டுக்கொண்டார். இதில் திமுக ஒன்றிய, நகர நிர்வாகிகள், கூட்டணி கட்சி நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories:

More
>