குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும்

உடுமலை, ஏப். 1: மடத்துக்குளம் தொகுதி அதிமுக வேட்பாளர் மகேந்திரன் நேற்று உடுமலை வடக்கு ஒன்றியத்துக்குட்பட்ட ராகல்பாவி, சுண்டக்காம்பாளையம், ஆர்.வேலூர், வடபூதனம், அம்மாபட்டி, வாளவாடி, மொடக்குப்பட்டி, தீபாலப்பட்டி உள்ளிட்ட கிராமங்களில் திறந்த வேனில் சென்று பிரசாரம் செய்தார்.அப்போது அவர் பேசுகையில், ‘‘அதிமுக ஆட்சியில் வாக்குறுதி அளித்தபடி பொதுமக்களுக்கு விலையில்லா மிக்சி, கிரைண்டர், பேன் வழங்கினோம். அதேபோல், இந்த தேர்தல் அறிக்கையில் கூறியுள்ளபடி அனைத்து குடும்பத்துக்கும் இலவசமாக வாஷிங் மெஷின் வழங்குவோம். மேலும் ஆண்டுக்கு 6 சிலிண்டர் இலவசமாக வழங்கப்படும். குடும்ப தலைவிக்கு மாதம் 1500 ரூபாய் வழங்கப்படும். கல்விக்கடன் தள்ளுபடி செய்யப்படும். குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும். எனவே, அனைவரும் இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து என்னை வெற்றி பெற செய்தால் தொடர்ந்து நலத்திட்ட பணிகள் செய்வேன்’’ என்றார். அவருடன் அதிமுக மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் சென்றனர்.

Related Stories:

>