மக்களின் அடிப்படை தேவைகள் நிறைவேற்றப்படும் பூம்புகார் திமுக வேட்பாளர் நிவேதா முருகன் உறுதி

மயிலாடுதுறை, ஏப். 1: பூம்புகார் சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் நிவேதா முருகன், குத்தாலம் ஒன்றியத்துக்கு உட்பட்ட கோனேரிராஜபுரம், வடமட்டம், மேக்கிரிமங்கலம், மல்லார்பேட்டை, திருவாவடுதுறை, திருவாலங்காடு மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் நேற்று வாக்கு சேகரித்தார். அப்போது அவர் பேசுகையில், கடந்த 10 ஆண்டுகளாக தமிழகத்தில் அதிமுக அரசின் அக்கறையின்மையால் விலைவாசி உயர்ந்து மக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். மக்களின் அடிப்படை தேவைகள் பெறுவதற்கு கூட லஞ்சம் கொடுக்க வேண்டிய சூழ்நிலையில் மக்கள் உள்ளனர்.

மக்களின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்வதோடு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முதல்வரானவுடன் கொரோனா நிவாரண நிதி ரூ.4 ஆயிரம் உடனடியாக வழங்குவார். காஸ் சிலிண்டருக்கு 100 ரூபாய் மானியம் பெறவும், படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்தி கொடுப்பதற்கும் உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து தன்னை வெற்றி பெற செய்ய வேண்டும் என்றார். மயிலாடுதுறை எம்பி ராமலிங்கம், முன்னாள் எம்எல்ஏ சித்திக், திமுக ஒன்றிய செயலாளர் முருகப்பா மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் உடனிருந்தனர்.

Related Stories:

More
>