அதிகாரிகள் பேச்சுவார்த்தையில் உடன்பாடு 20 கிராம மீனவர்களின் தேர்தல் புறக்கணிப்பு போராட்டம் வாபஸ்

சீர்காழி, ஏப். 1: அதிகாரிகள் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதால் 20 கிராம மீனவர்களின் தேர்தல் புறக்கணிப்பு போராட்டத்தை வாபஸ் பெறுவதாக கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. சுருக்குமடி வலைக்கு அனுமதி கேட்டு திருமுல்லைவாசல், பழையார், பூம்புகார், மடவாமேடு, நம்பியார்நகர், தர்காஸ் உள்ளிட்ட 20 கிராம மீனவர்கள் கடந்த 18ம் தேதி முதல் தேர்தல் புறக்கணிப்பு போராட்டம், வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இவர்களுடன் கலெக்டர் பிரவீன்பிநாயர் மற்றும் மீன்வளத்துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இந்நிலையில் சீர்காழி அருகே திருமுல்லைவாசல் மீனவ கிராமத்தில் மயிலாடுதுறை, நாகை மாவட்ட சுருக்குமடிவலை பயன்படுத்தும் 20 கிராம மீனவர்களின் ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்தில் அதிகாரிகள் அளித்த உறுதியையடுத்து தேர்தல் புறக்கணிப்பு போராட்டத்தை திரும்ப பெறுவது. வருகிற சட்டமன்ற தேர்தலில் வாக்களிப்பது என்று முடிவு செய்யப்பட்டது.

Related Stories:

>