வண்ணடிச்சோலை பகுதியில் குன்னூர் தொகுதி திமுக வேட்பாளர் ராமசந்திரன் பிரசாரம்

ஊட்டி, ஏப். 1:   குன்னூர் அருகேயுள்ள பெட்டட்டி சுங்கம், இளித்தொரை, எடப்பள்ளி, வண்டிச்சோலை, கோடமலை, அளக்கரை பகுதியில் திமுக வேட்பாளர் ராமசந்திரன் வாக்கு சேகரித்தார்.   தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் 6ம் தேதி நடக்கிறது. தேர்லுக்கு இன்னும் ஒரு சில நாட்களே உள்ள நிலையில், அனைத்து அரசியல் கட்சி வேட்பாளர்களும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். குன்னூர் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் ராமசந்திரன் குன்னூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட குன்னூர் மற்றும் கோத்தகிரி ஒன்றியம் மற்றும் நகர பகுதிகளில் நாள் தோறும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றார். கடந்த 2 நாட்களாக குன்னூர் நகரம் மற்றும் ஒன்றிய பகுதிகளில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். அனைத்து பகுதிகளிலும் பொதுமக்கள் பிரமாண்ட வரவேற்பு அளித்தனர்.  நேற்று குன்னூர் அருகேயுள்ள பெட்டட்டி சுங்கம், இளித்தொரை, எடப்பள்ளி, வண்டிச்சோலை, கோடமலை, அளக்கரை பகுதியில் ஈடுபட்டார். படுகர் இன மக்கள் பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர். திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் ஆட்சி அமைந்தவுடன், இக்கோரிக்கையை நிறைவேற்றக்கோரி சட்டமன்றத்தில் கோரிக்கை வைக்கப்படும்.

நீலகிரி மாவட்ட தேயிலை விவசாயிகளின் வாழ்வாதாரத்தை காக்க பசுந்தேயிலை கிலோ ஒன்றுக்கு ஆதார விலையாக ரூ.30 பெற்றுத்தர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். நீலகிரி மாவட்டத்தில் தொழில் நுட்ப பூங்கா அமைத்து வேலையில்லா இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு ஏற்படுத்தி தரப்படும். குன்னூர் பகுதியில் அரசு கலைக்கல்லூரி அமைத்து தர நடவடிக்கை எடுக்கப்படும், என்றார். இந்த வாக்கு சேகரிப்பின்போது, குன்னூர் ஒன்றிய செயலாளர் பிரேம்குமார், கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த பெள்ளி, காங்கிரஸ் கட்சியை சேர்ந்த லாரன்ஸ் மற்றும் திமுக நிர்வாகிகள், தோழமை கட்சி நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.

Related Stories:

>