×

செலவிப்நகர் கிராமத்திற்கு நடைபாதை அமைக்க கோரிக்கை

ஊட்டி, ஏப். 1: ஊட்டி பாலாடா அருகேயுள்ள செலவிப் நகர் கிராமத்திற்கு ேபாதிய நடைபாதை வசதி இல்லாததால், பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர்.  நீலகிரி மாவட்டம் ஊட்டி அருகே கேத்தி பாலாடா, செலவிப் நகர் கிராமம் உள்ளது. அதிகரட்டி பேரூராட்சிக்குட்பட்ட இக்கிராமத்தில் சுமார் 60க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இக்கிராமத்தில் வசிக்க கூடிய ெபாதுமக்கள் காய்கறி மற்றும் ேதயிலை தோட்டங்களுக்கும், கட்டுமான பணிகளுக்கும் கூலி வேலைக்கு சென்று பிழைப்பு நடத்தி வருகின்றனர். இக்கிராமத்தில் நடைபாதை, குடிநீர் உள்ளிட்ட போதுமான அடிப்படை வசதிகள் இல்லாததால், அவதியடைந்து வருகின்றனர்.

குறிப்பாக போதிய நடைபாதை வசதி இல்லாததால், காய்கறி தோட்டங்களுக்கு நடுவே நடந்து வந்து கிராமத்திற்கு செல்ல வேண்டிய நிைல உள்ளது.   இதனால், இருசக்கர வாகனங்கள் வைத்துள்ளவர்கள் சாலையோரங்களில் தங்களது வாகனங்களை நிறுத்தி விட்டு நடந்து செல்ல வேண்டியுள்ளது. குறிப்பாக மழை காலங்களில் சரிவான காய்கறி ேதாட்டங்கள் வழியாக செல்லும் போது வழுக்கி விழ கூடிய நிலை உள்ளது. எனவே செலவிப்நகர் கிராமத்திற்கு கான்கீரிட் நடைபாதை அமைக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

Tags : Chelavipnagar village ,
× RELATED மேட்டுப்பாளையம் வாக்குச்சாவடி மையத்தில் மேற்கு மண்டல ஐஜி நேரில் ஆய்வு