முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று கூடலூர், குன்னூரில் பிரசாரம்

ஊட்டி, ஏப். 1:  முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று (1ம் தேதி) கூடலூர் மற்றும் குன்னூர் சட்டமன்ற தொகுதிகளில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்கிறார். சட்டமன்ற தேர்தல் நெருங்கிய நிலையில், அனைத்து அரசியல் கட்சி தலைவர்களும் சூறவாளி பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். திமுக மற்றும் அதிமுக கட்சிகளின் முக்கிய தலைவர்கள் தற்போது பிரசாரத்தில் தீவிரம் காட்டி வருகின்றனர். இந்நிலையில், இன்று (1ம் தேதி) காலை தமிழக முதல்வர் எடப்படி பனிச்சாமி கூடலூர் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் ஜெயசீலனை ஆதரித்து பிரசாரம் மேற்கொள்கிறார். இதற்காக, கோவையில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் கூடலூர் வருகிறார். அங்கு பிரசாரம் மேற்கொள்கிறார். அங்கு பிரசாரம் முடித்த பின், மீண்டும் ஹெலிகாப்டர் மூலம் பிற்பகல் குன்னூர் சென்று அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் கப்பிச்சி வினோத்தை ஆதரித்து பிரசாரம் மேற்கொள்கிறார். இதையடுத்து ஹெலிகாப்டர் மூலம் கோவை செல்கிறார். முதலமைச்சர் பிரசாரத்தையொட்டி கூடலூர் மற்றும் குன்னூர் பகுதிகளில் பாதுகாப்பு ஏற்படுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

Related Stories:

>