சேவூர் ஒன்றியத்தில் அதியமான் தீவிர வாக்கு சேகரிப்பு

அவிநாசி, ஏப்.1: திமுக தலைமையிலான மத சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் அவிநாசி தொகுதி வேட்பாளரும் ஆதித்தமிழர் பேரவை நிறுவனருமான அதியமான் நேற்று சேவூர் ஒன்றியத்திற்குட்பட்ட தேவேந்திர நகர், ஒச்சாம்பாளையம், பாலியக்காடு, அம்பேத்கர்நகர், முதலிபாளையம், பாப்பாங்குளம், மாரப்பம்பாளையம், வடுகபாளையம், புஞ்சைதாமரைக்குளம், ஆவாரங்காடு, வெள்ளமடை, வாலியூர், ராக்கம்பாளையம், கிளாகுளம், கூளேகவுண்டன்புதூர், கந்தாயிபாளையம், திருமலைக்கவுண்டன்பாளையம், மங்கரசவலையபாளையம், புலிப்பார், பேரநாயக்கன்புதூர், போத்தம்பாளையம், சேவூர், தண்ணீர்பந்தல்காலனி  உள்ளிட்ட பகுதிகளில் பொதுமக்களை சந்தித்து, உதய சூரியன் சின்னத்திற்கு வாக்குகள் சேகரித்தார். அப்போது அவருடன், அவிநாசி சட்டமன்ற தொகுதி தேர்தல் பொறுப்பாளர் கோட்டை அப்பாஸ், சேவூர் ஒன்றிய திமுக செயலாளர் பால்ராஜ், திமுகபொதுக்குழு சரவணன்நம்பி, கோவைரவிக்குமார், விடுதலைச்செல்வன், பாலமுருகன், செல்வரங்கம், பத்மநாபன், பாரதி, காங்கிரஸ் கட்சி ஆலம் ஆகியோர் பங்கேற்று வாக்குகளை சேகரித்தனர்.

Related Stories:

>