×

தொண்டு காளிபாளையம் காலனியில் காவிரி குடிநீருக்காக மக்கள் நீண்ட தூரம் வாகனங்களில் அலையும் அவலம் போதிய தண்ணீர் வழங்க கோரிக்கை

க.பரமத்தி, ஏப்.1:  தென்னிலை அருகே தொண்டுகாளிபாளையத்தில் குடியிருப்புகளுக்கு ஏற்ப காவிரி கூட்டு குடிநீர் வழங்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். க.பரமத்தி ஒன்றியம் தென்னிலை தெற்கு ஊராட்சி தொண்டுகாளிபாளையம் காலனி உள்ளது. இங்கு 70க்கு மேற்பட்ட குடியிருப்புகளில் ஏராளமானோர் வசித்து வருகின்றனர். இவர்களின் குடிநீர் தேவையை போக்க அப்பகுதியிலேயே சுமார் 10ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியின் மூலம் போர்வெல் நீர் விநியோகிக்கப்பட்டு வந்துள்ளது. தற்பொழுது இப்பகுதி மக்களுக்கு குடிநீர் வடிகால் வாரியத்தின் மூலம் காவிரி குடிநீர் என்பது கனவாக உள்ளது.

காவிரி குடிநீருக்காக நீண்ட தூரம் சென்று வாகனங்கள் மூலம் கொண்டு வருகிறோம் என்கின்றனர். மேலும் தற்போதுள்ள போர்வெல் நீரும் குடியிருப்புகளுக்கு ஏற்ப வழங்கப்படுவதில்லை எனவும் கடந்த 6மாத காலமாக இப்பகுதிக்கு போதுமான அளவு குடிநீர் முறையாக வழங்கப்படவில்லை என இப்பகுதி மக்கள் குறை கூறுகின்றனர். இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தகவல் தெரிக்கபட்டதாகவும் ஆனால் அதிகாரிகளின் மெத்தனப் போக்கால் போதுமான குடிநீர் கிடைக்கமால் தேடி அலைந்து திரிந்து கொண்டு உள்ளாக பொதுமக்கள் புலம்பி வருகின்றனர். எனவே இப்பகுதி மக்களின் குடிநீர் தேவையை நிறைவு செய்து கொடுக்க அரசும், ஊராட்சி நிர்வாகவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில்: இப்பகுதி மக்களுக்கு காவிரி குடிநீர் வழங்கப்படுவது கிடையாது. போர்வெல் நீரும் குடியிருப்புகளுக்கு ஏற்ப வழங்கப்படுவதில்லை.இதனால் வேறு ஊராட்சி பகுதியில் இருந்து இரு சக்கர வாகனங்களில் கொண்டு வர வேண்டிய நிலை உள்ளது. எனவே பொது மக்களின் நலன் கருதி சம்மந்தப்பட்ட அதிகாரிகள் பார்வையிட்டு காவிரி குடிநீரும் குடியிருப்பிற்கு ஏற்ப போர்வெல் நீரும் கிடைக்க நடவடிக்கை எடுக்க முன் வர வேண்டும் என பலரும் எதிர்பார்க்கின்றனர்.

Tags : Kalipalayam ,Colony ,
× RELATED வாகனம் மோதி பெயிண்டர் பலி