×

தென்னிலையில் ஆடுகள் ஆராய்ச்சி நிலையம் அமைக்கப்படும் அரவக்குறிச்சி திமுக வேட்பாளர் மொஞ்சனூர் இளங்கோ வாக்குறுதி

க.பரமத்தி, ஏப்.1: அரவக்குறிச்சி தொகுதி திமுக வேட்பாளர் மொஞ்சனூர் இளங்கோ தொகுதிக்குட்பட்ட அரவக்குறிச்சி மற்றும் க.பரமத்தி ஆகிய ஒன்றிய பகுதி கிராமங்களில் தீவிரமாக வாக்குச் சேகரித்து வருகிறார்.
இந்நிலையில் நேற்று க.பரமத்தி ஒன்றியம் மொஞ்சனூர், கோடந்தூர் இரு ஊராட்சி பகுதியில் அரவக்குறிச்சி தொகுதி திமுக வேட்பாளர் மொஞ்சனூர் இளங்கோ தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டார். அவருக்கு செல்லும் இடமெல்லாம் பெண்கள் ஆர்வமுடன் ஆரத்தி எடுத்து வரவேற்றனர்.

அப்போது வேட்பாளர் மொஞ்சனூர் இளங்கோ பேசுகையில், தென்னிலை சுற்று பகுதியில் ஆடுகள் வளர்ப்பதை தொழிலாக கொண்டு பிழைப்பு நடத்தி வருகிறோம் நோய் வரும் காலங்களில் கால்நடைகளின் இறப்பை தடுக்க தென்னிலை சுற்று பகுதி கால்நடை வளர்போரின் நலன் கருதி ஆடுகள் ஆராய்ச்சி நிலையம் பெற்று தருவேன் என்றார். தேர்தல் பிரசாரத்தின் போது திமுகவினர் கூட்டணி கட்சியினர் மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகள் தீவிரமாக வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டனர்.

Tags : Aravakurichi ,DMK ,Monjanur Ilango ,Tennilai ,
× RELATED வாக்குப்பதிவு முடிந்து விட்டதால்...