×

சவுடம்மன் கோவில் வீதி உள்ளிட்ட பகுதிகளில் வானதி சீனிவாசன் தீவிர பிரசாரம்

கோவை, ஏப். 1: கோவை தெற்கு தொகுதியில் பாஜ வேட்பாளராக வானதி சீனிவாசன் போட்டியிடுகிறார். இவர் நேற்று நல்லம்ம ராஜா சந்து,  மணிமேகலை வீதி, இஸ்மாயில் வீதி, ரத்தினம் சந்து, சவுடம்மன் கோவில் வீதி உள்ளிட்ட பகுதிகளில் தாமரை சின்னத்திற்கு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். பிரசாரத்தின்போது வானதி சீனிவாசன் கூறியதாவது:  கோவை தெற்கு தொகுதி முழுவதும் பிரீ வை-பை வசதி ஏற்படுத்தப்படும். திருவள்ளுவர் பெயரில் ஒரு நூலகம் அமைக்கப்படும். மத்திய சிறைச்சாலை இடமாற்றம் செய்யப்பட்டு அந்த பகுதியில் உயிரியல் பூங்கா அமைக்கப்படும். கோவையில் ஐ.ஐ.எம் அமைக்கப்படும். கோவை தெற்கு தொகுதி முழுவதும் பெண் குழந்தைகளுக்கு பொன்மகள் சேமிப்பு திட்டம் செயல்படுத்தப்படும்.  இவ்வாறு வானதி சீனிவாசன் கூறினார். இந்த பிரசாரத்தின்போது மாவட்ட பொதுச்செயலாளர் ரமேஷ், ஊடக பிரிவு செயலாளர் சபரி கிரிஷ், கூட்டணி கட்சி நிர்வாகிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Tags : Vanathi Srinivasan ,Sowdamman Temple Road ,
× RELATED ராமசீனிவாசனால் வானதி டென்ஷன்: அதிமுக வேட்பாளருக்கு சாபம்