தோகைமலை அருகே நிலம் எழுதி கொடுப்பதில் தகராறு பெண்ணை தாக்கிய கணவர் உள்பட 4 பேர் மீது வழக்கு

தோகைமலை, ஏப். 1: தோகைமலை அருகே தொண்டமாங்கிணம் ஊராட்சி கடன்வாங்கியூர் கருப்பன் மனைவி தனலட்சுமி (35) ; கருப்பனுக்கு 5 ஏக்கர் பரப்பளவில் விவசாய நிலம் உள்ளதாக தெரிகிறது. இந்நிலையில் கருப்பன் தனக்கு சொந்தமான 5 ஏக்கர் விவசாய நிலத்தை தனது சகோதரி மருதாயி என்பரின் உறவினர்களுக்கு எழுதி கொடுக்க ஏற்பாடுகள் செய்து வந்ததாக கூறப்படுகிறது. தகவல் அறிந்த தனலட்சுமி தனது கணவர் கருப்பனிடம் தடுத்து கேட்டுள்ளார்.

 அப்போது இருவருக்கும் தகராறு முற்றியதால் அருகில் வசிக்கும் கருப்பனின் சகோதரி மருதாயின் உறவினர்களான கோமதி (36), விஜயா ( 40), கிருஷ்ணமூர்த்தி (26). ஆகியோர் வந்தனர்.

பின்னர் கருப்பனோடு சேர்ந்து 3 பேரும் தனலட்சுமியை திட்டி அடித்து கொலை மிரட்டல் விடுத்து உள்ளனர்.. இதில் காயம் அடைந்த தனலட்சுமி மணப்பாறை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.மேலும் இதுகுறித்து தனலட்சுமி தோகைமலை காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் கருப்பன், கோமதி, விஜயா, கிருஷ்ணமூர்த்தி ஆகிய 4 பேர் மீது வழக்கு பதிந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories:

More